அரியவகை நோயில் இருந்து விடுதலையடைந்த மர மனிதன்..!
வங்காளத்தில் ‘எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்’ என்ற அறிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு மர மனிதன் என அழைக்கப்பட்டவருக்கு சிகிச்சையின் பலனாக நோய் குணமடைந்துள்ளது.
வங்காளத்தில் சேர்ந்த அபுல் பஜந்தர் என்பவர் எபிடெர்மோடிஸ்ப்ளாசியா வெருசிஃபோர்மிஸ்’ எனும் மரபணு குறைபாடு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். உலகில் 4 பேருக்கு மட்டுமே உள்ள இந்த அறிய நோயால் அபுல் பஜந்தர் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்த நோயினால் பாதிக்கபட்டவர்களுக்கு கை, கால்களில் மரக்கட்டைகளைப் போன்று பெரிய பெரிய மருக்கள் உருவாகும்.
இந்த நோயை குணப்படுத்த வங்காள அரசு அபுல் பஜந்தருக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்தது. அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் 16 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன.
தற்போது அபுல் பஜந்தர் முழுமையாக குணமடைந்துள்ளார். மீண்டும் நோய் தாக்காமல் இருக்க இன்னும் இரண்டு அறுவை சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.