இந்தியா
இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவே சாமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி: ராகுல்
இளைஞர்களின் எதிர்காலத்துக்காகவே சாமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி: ராகுல்
உத்தரப்பிரதேச இளைஞர்களின் எதிர்காலத்துக்காக சமாஜ்வாதி - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும்,காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியும் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவும் தாமும் சிறந்த நண்பர்கள் என்றும், மாநிலத்துக்காக பல்வேறு நலத்திட்டங்களை அகிலேஷ் செய்துவருவது பாராட்டத்தக்கது என்றும் கூறினார். பின்னர் பேசிய அகிலேஷ் யாதவ், இரு கட்சிகளுக்கும் உத்தரப்பிரதேச மக்களுக்கு சேவை செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். உத்தரப்பிரதேச மக்கள் சமாஜ்வாடி - காங்கிரஸ் கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ளதாகவும், இதுவே இரு கட்சிகளுக்கும் வெற்றியைத் தேடித் தரும் எனவும் அகிலேஷ் தெரிவித்தார்.