”ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் சார்”- மோடிக்கு ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்து

”ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் சார்”- மோடிக்கு ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்து
”ஒரு நாள் விடுமுறை எடுத்துக் கொள்ளுங்கள் சார்”- மோடிக்கு ஷாருக்கான் பிறந்தநாள் வாழ்த்து

"உங்களுக்கு வலிமையும்.. ஆரோக்கியமும் எப்போதும் இருக்க வேண்டும், ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை கொண்டாடுங்கள் சார்" என்று பிரதமர் மோடிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் 72வது பிறந்தநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படுவதையொட்டி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

ஷாருக்கான் தெரிவித்திருக்கும் ட்விட்டர் வாழ்த்து பதிவில், " நம் நாடு மற்றும் நாட்டு மக்களின் நலனுக்கான உங்கள் அர்ப்பணிப்பு மிகவும் பாராட்டத்தக்கது. உங்கள் அனைத்து இலக்குகளையும் அடைய உங்களுக்கு வலிமையும் ஆரோக்கியமும் எப்போதும் இருக்கட்டும். ஒரு நாள் விடுமுறை எடுத்து உங்கள் பிறந்தநாளை அனுபவிக்கவும், சார். பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com