\
'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்

'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்

'சி.ஏ.ஏ-வை அமல்படுத்த இயலாது என மாநில அரசுகள் கூற முடியாது' கபில் சிபல்
Published on

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என எந்த மாநில அரசும் கூற முடியாது என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஏற்க முடியாது என கூற மாநில அரசுகள் கூறுவது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கலாம் அல்லது அதனை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றலாம் என குறிப்பிட்ட கபில் சிபல், சட்டத்தை அமல்படுத்த முடியாது என கூறுவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தப்போவதில்லை என மேற்குவங்கம் மற்றும் கேரள அரசுகள் கூறி வருகின்றன. காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவரான கபில்சிபல், இவ்வாறு பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com