
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்துக்கு எதிப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெற்று வரும் போராட்டங்களில், ரயில்வே சொத்துகள் பெருமளவில் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் ரயில்வே சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கண்டதும் சுட, பாதுகாப்பு படையினருக்கு ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்த உங்கள் வாக்கை இங்கே பதிவு செய்யலாம்.