\
ஊழலுக்கு மோடி சொன்ன புது விளக்கம்

ஊழலுக்கு மோடி சொன்ன புது விளக்கம்

ஊழலுக்கு மோடி சொன்ன புது விளக்கம்
Published on

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மீரட்டில் பாஜக தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஊழலுக்கு புதிய விளக்கம் கொடுத்தார்.

ஊழல் என்று பொருள்படும் ஆங்கில சொல்லான ‘SCAM’ என்பதில் S என்ற எழுத்து சமாஜ்வாதிக் கட்சியையும், C என்ற எழுத்து காங்கிரஸ் கட்சியையும், A என்ற எழுத்து தற்போதைய முதலமைச்சர் அகிலேஷ் யாதவையும், M என்ற எழுத்து மாயாவதியையும் குறிப்பதாக மோடி கூறினார். எனவே ஊழல் பொருள்படும் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மேலும், காங்கிரஸ் -சமாஜ்வாதிக் கூட்டணியை ஊழல் கூட்டணி என்று விமர்சித்த பிரதமர் மோடி பாஜக ஆட்சிக்கு வந்தால் 4 மாதங்களிலேயே கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com