'நாடு பாதுகாப்பாக இருக்கிறது' - உறுதியுடன் கூறும் பிரதமர் மோடி
நாடு பாதுகாப்பாக இருக்கிறது என்பதை நாட்டு மக்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு என்ற இடத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாடு பாதுகாப்பாக இருக்கிறது என உறுதியுடன் கூறினார். நாட்டிற்கு எதிரான எந்த செயல்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்றும், எதற்காகவும் யாருக்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
பயங்கரவாதி முகாம்களை தாக்கி அழித்த விமானப்படை வீரர்களுக்கு தலை வணங்குவதாகவும் பிரதமர் மோடி உணர்ச்சிபட பேசினார். நாடும், நாட்டு மக்களும் தலைகுனிவதை ஒருபோதும் அரசு ஏற்காது என்று கூறிய அவர், தனிநபரைவிட கட்சி பெரிது, கட்சியைவிட நாடுதான் நமக்கு எல்லாவற்றையும் விடப் பெரியது என்று கூறினார். பாகிஸ்தானின் பாலாகோட்டில் பயங்கரவாத முகாமை இந்திய விமானப் படை தாக்கி அழித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இவ்வாறு பேசியுள்ளார்.