\
பாஜகவில் சேர ரூ.1 கோடி பேரம்: குஜராத் பட்டிதர் இனத்தலைவர் பேட்டி

பாஜகவில் சேர ரூ.1 கோடி பேரம்: குஜராத் பட்டிதர் இனத்தலைவர் பேட்டி

பாஜகவில் சேர ரூ.1 கோடி பேரம்: குஜராத் பட்டிதர் இனத்தலைவர் பேட்டி
Published on

பாஜகவில் சேர்ந்தால் ரூ.1 கோடி கொடுப்பதாக அக்கட்சியினர் பேரம் பேசியதாக, குஜராத் பட்டிதர் இடஒதுக்கீடு இயக்கத் தலைவர்களில் ஒருவரான நரேந்திர படேல் கூறியுள்ளார்.

ஹர்திக் படேலின் இயக்கமான ‘பட்டிதர் அனமத் அன்டோலன் சமிதி’யின் உள்ளூர் தலைவரான நரேந்திர படேல், தன்னை பாஜகவில் சேர வற்புறுத்தியதாகவும், கட்சியில் இணைந்தால் ரூ.1 கோடி பணம் கொடுப்பதாக பேரம் பேசப்பட்டதாகவும் கூறியுள்ளார். நரேந்திர படேல் நேற்று மாலை தான் பாஜகவில் இணையப் போவதாக அறிவித்தார். திடீரென சில மணி நேரங்கள் கழித்து நேற்று இரவு, பாஜகவில் இணைவதற்காக ரூ.1 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும், மனசாட்சி இடம் கொடுக்காததால் எனது முடிவை மாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் கூறினார்.

மேலும், ரூ.10 லட்சம் தனக்கு முன்பணம் வழங்கப்பட்டதாகவும், மீதி 90 லட்சம் ரூபாய் பணம் திங்கட்கிழமை வழங்கப்படும் என்றும் பாஜகவினர் கூறியதாகத் தெரிவித்தார். அகமதாபாத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், வருண் படேல் என்ற மற்றொரு பட்டிதர் இனத்தலைவர் இந்த பேரத்தை நடத்தியதாகவும், ரூ.10 லட்சம் முன்பணத்தை எடுத்துக் காட்டி பேரம் பேசியதாகவும் நரேந்திர படேல் கூறியுள்ளார்.

வருண் படேல், ஹர்திக் படேலின் நெருங்கிய நண்பர். பட்டிதர் இடஒதுக்கீடு இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றியவர். வருண் படேலும், ஹர்திக் படேலின் மற்றொரு அணுக்கத் தலைவர் ரேஷ்மா படேலும் சமீபத்தில் பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com