காஷ்மீர் விவகாரம்: ட்ரம்புக்கு மறைமுகமாக பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் 

காஷ்மீர் விவகாரம்: ட்ரம்புக்கு மறைமுகமாக பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் 

காஷ்மீர் விவகாரம்: ட்ரம்புக்கு மறைமுகமாக பதிலளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் 
Published on

காஷ்மீர் விஷயத்தில் மூன்றாவது நபரின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நியூயார்க்கில் ஐநா கூட்டங்களில் பங்கேற்ற அவர், நேற்றிரவு வாஷிங்டன் வந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், காஷ்மீர் விஷயத்தில் யாருடைய தலையீட்டையும் அனுமதிப்பதில்லை என்பதில் 40 ஆண்டுகளாக இந்தியா உறுதியாக உள்ளதாக தெரிவித்தார். இருதரப்பு இடையேயான பிரச்னையில் மூன்றாம் நபரின் தலையீட்டை இந்தியா ஒருபோதும் ஏற்காது என்றும் ஜெய்சங்கர் கூறினார். 

தனக்கான பிரச்னையை தீர்க்க அடுத்தவர் தலையிட வேண்டுமா என்பதை தாம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்ற அவர், வேறு ஒருவரின் தலையீடு வேண்டாம் என்று நினைத்து விட்டால் அதை வற்புறுத்தவோ, திணிக்கவோ யாருக்கும் உரிமையில்லை என்றும் தெரிவித்தார். 

காஷ்மீர் பிரச்னை குறித்து இந்தியா, பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பலமுறை கூறியுள்ள நிலையில், ஜெய்சங்கரின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com