“பிஷப் எந்தத் தவறும் செய்யவில்லை” - கிறிஸ்துவ சபை அறிக்கை
கேரளாவில் கன்னியாஸ்திரியால் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாக்கப்பட்டிருக்கும் பிஷப் பிராங்கோ, எந்தத் தவறும் செய்யவில்லை என அவர் அங்கம் வகிக்கும் மிஷினரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை தெரிவித்துள்ளது.
ஜலந்தரில் இருக்கும் மிஷினரிஸ் ஆஃப் ஜீசஸ் சபை, கன்னியாஸ்திரியின் புகார் தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும், அதில் கன்னியாஸ்திரி மேலும் 9 பேருடன் இணைந்து பிஷப்புக்கு எதிராக சதி செயலில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளதாகவும் கூறியுள்ளது. புகார் அளித்த கன்னியாஸ்திரியின் நண்பர்களே, தேவாலய வருகை பதிவேட்டை கையாண்டவர்கள் என்றும் அதில் முறைகேடு நடந்திருக்க கூடும் என்றும் அந்தச் சபை கூறியுள்ளது.
கன்னியாஸ்திரி சிசிடிவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக தெரிவித்துள்ள அந்தச் சபை, கன்னியாஸ்திரி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறும் 2015ம் ஆண்டு மே 23ஆம் தேதி பிஷப் பிராங்கோ வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்ததற்கான புகைப்பட ஆதாரம் இருப்பதாக தெரிவித்துள்ளது.