“இது முத்தமிடக்கூடாத பகுதி”: காதலர்களுக்கு ஷாக் கொடுத்த மும்பை குடியிருப்புவாசிகள்

“இது முத்தமிடக்கூடாத பகுதி”: காதலர்களுக்கு ஷாக் கொடுத்த மும்பை குடியிருப்புவாசிகள்

“இது முத்தமிடக்கூடாத பகுதி”: காதலர்களுக்கு ஷாக் கொடுத்த மும்பை குடியிருப்புவாசிகள்
Published on

மும்பையின் போரிவலியில் உள்ள சத்யம் சிவம் சுந்தரம் குடியிருப்பில் வசிப்பவர்கள், தங்கள் குடியிருப்புக்கு வெளியே காதலர்கள் முத்தமிடுவதை தடுக்கும் விதமாக "இது முத்தமிடக்கூடாத பகுதி" என்று ஒரு எழுதி வைத்துள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கத்துக்கு பின்னர், இப்பகுதியில் உள்ள சாலையோரத்தில் மாலை 5 மணி முதல் இரவு வரை காதல் ஜோடிகள் பைக்குகள் மற்றும் கார்களில் நெருக்கமாக இருப்பதை குடியிருப்பாளர்கள் கண்டு சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஆரம்பத்தில், குடியிருப்பாளர்கள் இது தொடர்பான வீடியோக்களை எடுத்து காவல்துறையினரிடம் புகார் செய்தனர். ஆனால், காவல்துறையினரிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லாததால் குடியிருப்பாளர்கள் தாங்களாகவே இதுபோல எழுதலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.  

இந்த அறிவிப்பு பயனளிப்பதாகவும், இதனால் இங்குவரும் காதலர்களின்  எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய குடியிருப்பாளர் கைலாஷ்ராவ் தேஷ்முக், "நாங்கள் காதலர்கள் மற்றும் முத்தத்திற்க்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் எங்கள் வீடுகளுக்கு வெளியே உள்ள வளாகத்தை ஒரு முத்த மண்டலமாக மாற்றுவதை அனுமதிக்க முடியாது. குடியிருப்பாளர்கள் தங்கள் ஜன்னல்களுக்கு வெளியே தினசரி நடக்கும் இது போன்ற ரொமான்ஸ் காட்சிகளால் சங்கடத்துக்கு உள்ளானார்கள். ஆரம்பத்தில், இதை நாங்கள் இங்குவரும் ஜோடிகளுக்கு விளக்க முயன்றோம், ஆனால் அது பயனளிக்காததால்தான் இந்த யோசனை எங்களுக்கு வந்தது என்று கூறினார்.

இது பற்றி பேசிய பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஜோடி, “ 'எச்சில் துப்பக்கூடாது', 'புகை பிடிக்கக் கூடாது', 'மது அருந்தக்கூடாது' என்ற வசனங்கள் பொதுவானது. ஆனால் 'முத்தமிடக்கூடாத பகுதி' என்பது புதிதாக உள்ளது. கொரோனா ஊரடங்குக்கு பிறகு பூங்காக்கள், திரையரங்குகள் பூட்டப்பட்டுள்ளன. தற்போது சாலைகள் போன்ற திறந்தவெளிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. சாலைகள் பொது சொத்து, ங்கும் தடைபோட்டால் நகரத்தில் ஜோடிகளுக்கு இடமில்லாமல் போகும்என்று அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com