ரயில்களின் மோதலை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்: என்ன அது?

ரயில்களின் மோதலை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்: என்ன அது?
ரயில்களின் மோதலை தடுக்கும் புதிய தொழில்நுட்பம்: என்ன அது?
Published on

இரு ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேர் வந்தால் மோதலை தவிர்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள கவச் என்ற பாதுகாப்பு அம்சத்தின் செயல்விளக்கம் வெற்றிகரமாக நடந்தது.

விபத்தில்லாத பயணம் என்ற திட்டத்தை இந்திய ரயில்வே செயல்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒரே தண்டவாளத்தில் வரும் ரயில்களின் மோதலை தடுப்பதற்காக 'கவச்’ என்ற செயற்கைக்கோள் அடிப்படையிலான செயல்முறையை ரயில்வே உருவாக்கியுள்ளது. இச்செயல்முறை செகந்திரபாத் அருகே நிகழ்த்திக் காட்டப்பட்டது. ’கவச்’ தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்ட இரு ரயில் என்ஜின்கள் ஒரே தண்டவாளத்தில் வந்தபோது அவை 380 மீட்டர் இடைவெளி இருக்கும் போது தாமாகவே நின்றுவிட்டன. அப்போது ஒரு இன்ஜினில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவும் மற்றொரு இன்ஜினில் ரயில்வே வாரிய தலைவர் விகே திரிபாதியும் அமர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது 1200 கிலோ மீட்டர் நீளமுள்ள இருப்பு பாதைகளில் ’கவச்’ வசதி இருக்கும் நிலையில் அடுத்து டெல்லி - மும்பை டெல்லி - கொல்கத்தா மார்க்கத்தில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com