‘காஷ்மீர் தனிநாடு’: பீகார் பள்ளியின் வினாத்தாளில் புதிய சர்ச்சை

‘காஷ்மீர் தனிநாடு’: பீகார் பள்ளியின் வினாத்தாளில் புதிய சர்ச்சை

‘காஷ்மீர் தனிநாடு’: பீகார் பள்ளியின் வினாத்தாளில் புதிய சர்ச்சை
Published on

பீகார் மாநிலத்தில் அரசு பள்ளியின் 7 ஆம் வகுப்பு வினாத்தாளில் காஷ்மீர் தனிநாடு என்று குறிப்பிட்டு கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பீகாரில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் அக்டோபர் 5 ஆம் தேதி தேர்வு தொடங்கியது. இதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட வினாத்தாளில், கீழ்வரும் 5 நாடுகளில் வசிக்கும் மக்களை எப்படி அழைப்பார்கள் என கேட்கப்பட்டு, சீனா, நேபாளம், இங்கிலாந்து, காஷ்மீர், இந்தியா என குறிப்பிடப்பட்டுள்ளது. காஷ்மீர் தனி நாடு என கூறும் வகையிலும் கேட்கப்பட்டுள்ள இந்த கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இது குறித்து விளக்கம் அளித்துள்ள பீகார் கல்வி அதிகாரிகள் இந்த பிழை வினாத்தாள் அச்சடிக்கும்போது ஏற்பட்டுள்ளது என்றும், இதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com