‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை

‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை

‘முப்படைகளுக்கும் ஒரே தளபதி’- பிரதமர் மோடி உரை
Published on

முப்படைகளுக்கும் ஒரே தளபதி நியமிக்கப்பட உள்ளதாக பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார். 

நாட்டின் 73ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இன்று காலை 7.30 மணியளவில் பிரதமர் மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றினர். அத்துடன் ராணுவத்தினர் அளித்த அணிவகுப்பு மரியாதையையும் பிரதமர் மோடி ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், “நம் பாதுகாப்பு படைகள் மிகவும் சிறப்பு மிக்கவை. இந்த முப்படைகளும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இன்று நான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிடுகிறேன். அதன்படி இனிமேல் இந்தியாவில் Chief Of Defence Staff(CDS) என்ற புதிய பதவி உருவாக்கப்படவுள்ளது. இந்தப் பதவியை வகிப்பவர் தான் இந்தியாவின் ராணுவம், விமானம், கப்பல் ஆகிய முப்படைகளுக்கும் ஒரே தலைவராக இருப்பார். இது நமது நாட்டின் பாதுகாப்பு படைகளை மேலும் வலுவானதாக்கும்” எனத் தெரிவித்துள்ளார். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com