“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ

“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ

“பத்து லட்சத்தை திருடிட்டாங்க..” - சட்டசபையில் அழுத எம்.எல்.ஏ
Published on

தனது பணம் ரூ.10 லட்சம் திருடு போய்விட்டதாகவும், அதை மீட்டுத்தராவிட்டால் தான் தற்கொலை செய்துகொள்வேன் என்று உத்தரப்பிரதேச எம்.எல்.ஏ ஒருவர் அழுதுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அசம்கார்ஸ் மேஹ்நகர் தொகுதியிலிருந்து எம்.எல்.ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கல்ப்நாத் பஸ்வான். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த இவர், இன்று சட்டசபையில் அழுத நிகழ்வு அனைவரையும் வாயடைக்கச் செய்துள்ளது. சட்டப்பேரவையில் பேசத் தொடங்கிய பஸ்வான், “இந்த அவையில் நான் கையேந்திக் கேட்டுக்கொள்கிறேன். இங்கேயே நீதி கிடைக்காவிட்டால், நான் வேறு எங்கு போவேன். எனது பணம் ரூ.10 லட்சத்தை ஒரு ஹோட்டலில் 15 நாட்களுக்கு முன்னர் திருடிவிட்டார்கள். 

இதுதொடர்பாக நான் புகார் பதிவு செய்தேன். ஆனால் எனது புகாரை யாரும் பதிவு செய்யவில்லை. நான் இறந்து விடுவேன். நான் மிகவும் ஏழை. என் பணம் மட்டும் கிடைக்காவிட்டால், நான் தற்கொலை செய்துகொள்வேன்” என அழுதார். அவரது இந்தச் செயலைக்கண்ட மற்ற எம்.எல்.ஏக்கள் என்ன பேசுவது எனத் தெரியாமல் வாயடைத்து போயினர். அவரது இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com