\
’நாளை நான் சென்னையில் இருப்பேன்’ – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

’நாளை நான் சென்னையில் இருப்பேன்’ – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!

’நாளை நான் சென்னையில் இருப்பேன்’ – பிரதமர் மோடி தமிழில் ட்வீட்!
Published on

பிரதமர் மோடி நாளை தமிழகம் வருவதையொட்டி தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

நாளை காலை 10.30 மணிக்கு தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். அவரது, வருகையையொட்டி நான்கு அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது” என்று பதிவிட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com