"ஆம் ஆத்மிக்கு நான் ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்"-சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் பரபரப்பு பேச்சு

"ஆம் ஆத்மிக்கு நான் ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்"-சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் பரபரப்பு பேச்சு
"ஆம் ஆத்மிக்கு நான் ரூ.60 கோடி கொடுத்துள்ளேன்"-சுகேஷ் சந்திரசேகர் மீண்டும் பரபரப்பு பேச்சு

பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் விசாரணை முடிந்து அழைத்துச் செல்லப்பட்டபோது செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது அவர், தான் ஆம் ஆதமி கட்சிக்கு 60 கோடி ரூபாய் கொடுத்துள்ளேன் என்று மீண்டும் தெரிவித்தார்.

டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ரூ. 200 கோடி பண மோசடி வழக்கில் இன்று சுகேஷ் சந்திரசேகரை நேரில் ஆஜர்படுத்தினர் காவல்துறையினர். நீதிமன்றத்திலிருந்து சுகேஷை காவல்துறையினர் அழைத்துச்செல்லும் பொது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "நான் ஆம் ஆத்மி கட்சிக்கு 60 கோடியை கொடுத்துள்ளேன்" என்றார்.

இரட்டை இலை சின்னம் பெற தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் முக்கிய குற்றவாளியாக அறியப்பட்ட சுகேஷ் சந்திரசேகர், பணமோசடி மற்றும் பலரை ஏமாற்றிய குற்றச்சாட்டில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், டெல்லி பாட்டியலா நீதிமன்றத்தில் 200 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் இன்று நேரில் ஆஜர்படுத்தப்பட்டடார் சுகேஷ் சந்திரசேகர். அப்போதுதான், தான் ஆம் ஆத்மிக்கு 60 கோடி ரூபாய் பணம் கொடுத்துள்ளேன் என்று மீண்டும் தனது குற்றச்சாட்டை வெளிப்படுத்தினார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்ததாகவும் கூறியுள்ளார் அவர்.

முன்னதாக அவர், “எனக்கு கட்சிப் பதவி கிடைக்கும் என்பதற்காக கெஜ்ரிவாலிடம் ரூபாய் 50 கோடி கொடுத்தேன். சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்தியராஜ் எனக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அவரிடம் 10 கோடி ரூபாய் கொடுத்தேன்” என்று கூறினார். இதுதொடர்பாக டெல்லி துணை நிலை ஆளுநருக்கு சிறையில் இருந்து சுகேஷ் சந்திரசேகர், கடிதம் எழுதி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் எழுதிய அந்த கடிதத்தில் “ஆம் ஆத்மி கட்சி தலைவரை எனக்கு 2015 ஆம் ஆண்டு முதல் தெரியும். தென்னிந்தியாவில் எனக்கு முக்கியமான கட்சி பதவி வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டதால் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் ரூ. 50 கோடி வழங்கினேன்” என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் கடந்த மாதம், கட்சிக்காக 500 கோடி ரூபாய் வசூலிக்குமாறு கெஜ்ரிவால் கேட்டுக் கொண்டதாகவும், டெல்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தன்னை மிரட்டியதாகவும் சந்திரசேகர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை ஆம் ஆத்மி நிராகரித்தது.

இந்நிலையில் பண மோசடி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகேஷ் சந்திரசேகர் இன்று மீண்டும் அதேபோன்ற தன் கருத்துகளை தெரிவித்திருப்பது தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com