’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்!

’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்!

’எங்க ஊருக்கு ஆம்புலன்ஸ் கூட வராது’: மரப்பாலத்தை நம்பி வாழும் கிராமம்!
Published on

சத்தீஸ்கரின் பல்ராம்பூர் மாவட்டத்தில் குளத்தைக் கடக்க பாலம் இல்லாததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் உள்ளது பிப்ராஹி கிராமம். இந்த கிராமத்தில் இருந்து மற்ற ஊர்களுக்குச் செல்ல குளத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும். குளத்தில் தண்ணீர் குறைவாக இருக்கும்போது மரப்பாலத்தின் மூலம் சென்றுவிடும் இவர்கள் மழைகாலத்தில் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிற பகுதிகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இப்போது அங்கு பெய்து வரும் மழைகாரணமாக குளம் நிரம்பியுள்ளதால் மரக்கட்டையால் ஆன தற்காலிக பாலத்தின் மூலம் ஆபத்தான முறையில் ஆற்றைக் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி அந்த ஊரைச் சேர்ந்த மோகன் மேத்தா என்பவர் கூறும்போது, ‘’இங்கு பாலம் வேண்டும் என்று பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு மனு கொடுத்தோம். பல்வேறு அரசியல் தலைவர்களை சந்தித்தும் கொடுத்தோம். பலனில்லை. இதனால் வர இருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மழை காலத்தில் எங்கள் ஊர் தனித்தீவாகி விடுகிறது. மரப்பாலம் தற்காலிகமானது. அதில் செல்பவர்கள் தினமும் யாராவது ஒருவர் குளத்துக்குள் விழுந்துவிடுகிறார்கள். இன்று கூட ஒருவர் விழுந்துவிட்டார்’ என்றார். 

மற்றொருவர் கூறும்போது, ‘’நாடு சுதந்தரம் அடைந்து இத்தனை வருடம் ஆகியும் இன்னும் மரப்பாலத்தை நம்பியே வாழ்ந்துவருகிறோம். மாணவர்கள் இதைப் பயன்படுத்திதான் பள்ளிக்குச் சென்றுவருகின்றனர். நிரந்தர பாலம் இல்லாததால் ஆம்புலன்ஸ் கூட எங்கள் ஊருக்கு வரமுடிவதில்லை’ என்றார் வருத்ததுடன்.


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com