’கருப்பு தினம்’: எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

’கருப்பு தினம்’: எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி

’கருப்பு தினம்’: எமர்ஜென்சி நாட்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி
Published on

அவசரநிலைப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த நாட்கள் இந்திய வரலாற்றின் கருப்பு தினம் என்று எமர்ஜென்சி நாட்களை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். 

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு வானொலி உரையாற்றிய பிரதமர் மோடி,  எமர்ஜென்சியின் போது மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தின் மாண்புகளை காத்தனர் என்று கூறியுள்ளார். ஜனநாயகம் என்பது நமது பண்பாடு என கூறி இருக்கும் மோடி, ஜனநாயகத்தை விரும்புபவர்கள், கடந்த 1975 ஜூன் 25 நள்ளிரவை மறக்க மாட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். அன்றைய தினத்தில் நாடு முழுவதும் சிறையாக மாறியதாகக் குறிப்பிட்ட மோடி, ஊடகங்கள் வலுவிலக்கச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார். கடந்த 21ம் தேதி யோகா உலகையே ஒன்று சேர்த்தது எனபெருமிதம் தெரிவித்துள்ள இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com