இந்தியா
"கொரோனா 3ஆம் அலையைத் தவிர்ப்பது கடினம்" - மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் தகவல்
"கொரோனா 3ஆம் அலையைத் தவிர்ப்பது கடினம்" - மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் தகவல்
இந்தியாவில் கொரோனா 3ஆவது அலையைத் தவிர்ப்பது கடினம் என மத்திய அரசின் முதன்மை விஞ்ஞான ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவல் நீடிக்கும் நிலையில், 3ஆம் அலையும் தொடர வாய்ப்பு உள்ளதாக அவர் கூறியுள்ளார். அதனை தவிர்ப்பது கடினம் எனத் தெரிவித்துள்ள விஜயராகவன், 3ஆம் ஆலையை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் லவ் அகர்வால், சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார். கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு, ஹரியானா மாநிலத்தின் குருகிராம் ஆகிய இடங்களிலும் தொற்று தீவிரத்துடன் பரவுவதாகக் கூறியுள்ளார்.