நீரை சேமியுங்கள்  மக்களுக்கு மோடி அறிவுரை !

நீரை சேமியுங்கள் மக்களுக்கு மோடி அறிவுரை !

நீரை சேமியுங்கள் மக்களுக்கு மோடி அறிவுரை !
Published on

நீர் சேமிப்புக்கு மக்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.

"மன் கி பாத்" நிகழ்ச்சியில் மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி, வெயில் காலத்தில் தண்ணீர் தேவை அதிகரிப்பதாகவும், இந்த சமயத்தில் நீர் வீணாவதை தடுத்து, சேமிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் தண்ணீர் சேமிப்பு பற்றி அறிவுறுத்தும் கல்வெட்டுகள் உள்ளன என சுட்டிக்காட்டிய மோடி நதிநீர் சேமிப்புக்காக 32, ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற இந்திய வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

தூய்மை இந்தியா திட்டத்துக்காக கோடை விடுமுறையில் பயிற்சி பெற்று சேவை செய்யும்படி இளம் இந்தியர்களுக்கு அழைப்பு விடுத்த மோடி இப்படி சேவை செய்பவர்களை கௌரவிக்கும் விதமாக சான்றிதழ் வழங்கப்படும் என அறிவித்தார். ரம்ஜான் மாதம் வர உள்ள நிலையில் இஸ்லாமியர்களுக்கு மோடி ரம்ஜான் வாழ்த்து கூறினார். ரம்ஜான் நோன்பு மூலம் மற்றவர்களுடைய பசி, தாகம் குறித்து புரிதல் அதிகரிக்கிறது என மோடி குறிப்பிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com