ஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு

ஜம்மு காஷ்மீர் விவகாரம் - பாஜகவுக்கு காங். மூத்தத் தலைவர் வரவேற்பு
Published on

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என ஹரியானா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான பூபிந்தர் சிங் ஹுடா தெரிவித்துள்ளார்.

ஹரியானா மாநிலம் ரோதக் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாடு தவறானது என்றும் கூறினார். தேசப்பற்று மற்றும் சுய மரியாதை என்று வரும்போது அதில் எந்த சமசரசத்துக்கும் இடம் அளிக்கக் கூடாது என கூறிய அவர், தற்போது இருக்கும் காங்கிரஸ் பழைய காங்கிரஸ் இல்லை என்றும் சாடினார். 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தனிக் கட்சி தொடங்க ஹுடா திட்டமிட்டிருப்பதாலேயே பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக அவர் பேசி வருவதாக கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com