“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு

“மக்கள் சிரமங்களை போக்குங்கள்” - மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவு
Published on

சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அகற்றுவதில் கவனம் செலுத்துமாறு மத்திய அமைச்சகங்களுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

அனைத்து மத்திய அமைச்சகங்களின் செயலாளர்கள் கூட்டத்தில் நரேந்திர மோடி இந்த உத்தரவை பிறப்பித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த கூட்டத்தில் பேசிய பிரதமர், வாழ்க்கைத் தரம் மேம்பட வேண்டும் அதற்காக தற்போதுள்ள நிலை மாற வேண்டும் என்ற எதிர்பார்ப்புடனேயே கடந்த தேர்தலில் மக்கள் வாக்களித்திருப்பதாகவும் குறிப்பிட்டார். 

மேலும், ஒவ்வொரு அமைச்சகமும் அடுத்த 5 ஆண்டுகளில் செயல்படுத்த வேண்டிய, பலன்கள் அளிக்க கூடிய திட்டங்கள் அடங்கிய பட்டியலை உருவாக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் அரசு அதிகாரிகள் சிறப்பாக செயல்பட்டதன் காரணமாகவே தங்கள் ஆட்சி தொடர மக்கள் வாக்களித்ததற்கு காரணம் என பிரதமர் பேசினார். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜிதேந்திர சிங் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com