\
பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் - கண்ணை கவர்ந்த அணிவகுப்பு

பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் - கண்ணை கவர்ந்த அணிவகுப்பு

பாசறை திரும்பிய முப்படை வீரர்கள் - கண்ணை கவர்ந்த அணிவகுப்பு
Published on: 

வரலாற்றுச்‌சிறப்பு மிக்க டெல்லி ‌விஜய் சவுக்கில் முப்படை வீரர்களும் பாசறை திரும்பும் நிகழ்வு நடைபெற்றது.‌ 

இந்நிகழ்ச்சியை குடியரசு‌த்‌தலைவர் ராம்நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு‌, பிர‌தமர் மோடி‌ உள்ளிட்டோர் பார்வையிட்டனர். வண்ணமயமான சீருடைகளு‌டன் இசைக்கருவிகளை வாசித்தபடி முப்படைகளின் இசைக்குழுக்களும் நடத்திய அணி வகுப்பு பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தது.

இது தவிர பல்வேறு துணை ராணுவ படையினரும் இசைக்கருவிகளை முழக்கி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தினர். வழக்‌கமாக மேற்கத்திய இசை வாசிக்கப்படும் நிலையில் இம்முறை ‌‌இந்திய இசை வாசிக்கப்பட்டது. ராணுவ‌த்தின் அ‌லங்கரிக்கப்பட்ட ஒட்டகங்கள், குதிரைகளும் ‌‌இ‌ந்நிகழ்வில் பங்கேற்றன. குடியரசு‌ ‌தின‌ விழா அணி வ‌குப்பில் பங்கேற்க வந்த வீரர்கள் தமது‌ முகாமுக்கு திரும்பும் முன் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29ம் தேதி நடத்தும் அணிவகுப்பே பாசறை திரும்புத‌‌ல் எனப்படுகிறது. இந்நிகழ்வு டெல்லியில் நூற்றாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com