‘Back to home’: விமான விபத்தில் உயிரிழந்த ஷரஃபுவின் உருக்கமான கடைசி ஃபேஸ்புக் பதிவு!  

‘Back to home’: விமான விபத்தில் உயிரிழந்த ஷரஃபுவின் உருக்கமான கடைசி ஃபேஸ்புக் பதிவு!  

‘Back to home’: விமான விபத்தில் உயிரிழந்த ஷரஃபுவின் உருக்கமான கடைசி ஃபேஸ்புக் பதிவு!  
Published on

கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த ஷரஃபு பிலாசேரி என்பவர், துபாயிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் புறப்படுவதற்கு முன்னர் ‘பேக் டூ ஹோம்’ என மகிழ்ச்சியுடன் தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது மனதை உருக்குவதாக உள்ளது.

ஷரஃபு பிலாசேரி ஃபேஸ்புக்கில் எப்போதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானத்தில், துபாயில் ஏறிய உடனே ஷரஃபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ‘Back to home’  என்று முகத்தில் ஃபேஸ் ஷீல்டு அணிந்துக்கொண்டு. மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை ஸ்டேட்டஸ் போட்டுள்ளார். ஆனால் விதி அவருக்கு வேறு முடிவை தந்துள்ளது

அதிர்ஷ்டவசமாக சரஃபுவின் மனைவியும் மகளும் சிறு காயங்களுடன் உயிர் தப்பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். கேரளாவின் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ஷரஃபு பிலாசேரி துபாயில் தனது மனைவி மற்றும் மகளுடன் நீண்டகாலமாக வசித்து வந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com