புதுச்சேரியின் வளர்ச்சியில் அக்கறைக்காட்டியவர் வாஜ்பாய்- நாராயணசாமி

புதுச்சேரியின் வளர்ச்சியில் அக்கறைக்காட்டியவர் வாஜ்பாய்- நாராயணசாமி
புதுச்சேரியின் வளர்ச்சியில் அக்கறைக்காட்டியவர் வாஜ்பாய்- நாராயணசாமி

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் வைக்கப்பட்ட வாஜ்பாய் திருவுருவப்படத்திற்கு முதல்வர் நாராயணசாமி மலர்தூவி அஞ்சலி அனைத்து தரப்பினரும் பாராட்டக்கூடிய பிரதமராக வாஜ்பாய் இருந்தார் என புகழாரம் சூட்டினார்.

நேற்று மரணமடைந்த முன்னாள் பாரதப்பிரதமர் வாஜ்பாய்க்கு நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தி வருகின்றார்கள். இந்நிலையில் புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட படத்திற்கு முதல்வர் நாராயணசாமி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து தரப்பினரும் பாராட்டக்கூடிய பிரதமராக இருந்தவர் வாஜ்பாய் என புகழாரம் சூட்டினார். 

புதுச்சேரி மாநில வளர்ச்சிக்கு மிகுந்த அக்கரை காட்டியவர் அதனால் தான் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக இன்று ஒரு நாள் பொதுவிடுமுறை விடப்பட்டுள்ளது என்றும் 7 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவித்தார். இதன் பின் வாஜ்பாய் உடலுக்கு அஞ்சலி செலுத்த டில்லி புறப்பட்டு சென்றார். வாஜ்பாய் மறைவையொட்டி சட்டமன்றம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களில் தேசியக்கொடி அறைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com