அக்னிபத் திட்டம் இளைஞர்கள் மீதான மோசடி! மேகாலாயா ஆளுநர் கடும் விமர்சனம்!

அக்னிபத் திட்டம் இளைஞர்கள் மீதான மோசடி! மேகாலாயா ஆளுநர் கடும் விமர்சனம்!
அக்னிபத் திட்டம் இளைஞர்கள் மீதான மோசடி! மேகாலாயா ஆளுநர் கடும் விமர்சனம்!

மேகாலாயா ஆளுநர் சத்ய பால் மாலிக் சமீபத்தில் இறந்த தனது நண்பர் கஜே சிங் தாமாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற கெக்ரா கிராமத்திற்கு வந்திருந்தார். அப்போது மத்திய அரசின் அக்னிபத் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மிக காட்டாமான கருத்துகளை அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக், எதிர்கால போர் வீரர்களான இளைஞர்களுக்கு அக்னிபத் திட்டத்தின் 4 ஆண்டுகளில் 6 மாதம் பயிற்சியும், 6 மாதம் விடுப்பும் கிடைக்கிறது என்றார்.

மீதமுள்ள 3 ஆண்டுகள் பணி முடித்து ஓய்வூதியம் இன்றி வெளிவரும் அவர்களுக்கு திருமணம் கூட நடைபெறாது எனக்கூறிய அவர், அக்னிபத் திட்டம் இளைஞர்களுக்கு எதிரானது என விமர்சித்தார். எனவே ஒப்பந்த அடிப்படையில் ஆள்தேர்வு செய்யும் இத்திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என மாலிக் கேட்டுக்கொண்டார்.

தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள மூன்று விவசாயச் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தும் போது, விவசாயிகளின் பிரச்னையை தாம் முன்வைத்ததாகவும், இப்போது இளைஞர்கள் மற்றும் அவர்களின் பிரச்னைகள் குறித்து பேசுவதாகவும் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறினார்.

இந்த அரசியல் பிரச்சினையை எழுப்புவதற்கு முன் நீங்கள் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டுமா என்று பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, மாலிக், "உங்களைப் போன்ற ஆலோசகர்களின் பொறியில் நான் சிக்கியிருந்தால், என்னால் இந்த இடத்தை அடைய முடியாது. என்னை ஆளுநர் ஆக்கியவர் என்னிடம் அவ்வாறு செய்யச் சொன்னால், ஒரு நிமிடத்தில் நான் பதவியை விட்டு விலகுவேன்." என்று அதிரடியாக பதிலளத்தார் மாலிக்.

ஓய்வுக்குப் பிந்தைய திட்டங்கள் குறித்த கேள்விக்கு, மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடவோ அல்லது தேர்தலில் போட்டியிடவோ விருப்பம் இல்லை என்று மாலிக் கூறினார். விவசாயிகள் மற்றும் ராணுவ வீரர்களுக்காக தேவைப்படும் இடங்களில் போராடுவேன் என்றும் ஜம்மு காஷ்மீர் மாநிலம் குறித்து புத்தகம் எழுதுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/EAB2P7ZE-24" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

மத்திய அரசின் திட்டத்தை மாநில ஆளுநர் ஒருவர் எதிர்ப்பது முக்கியத்துவம் பெறுகிறது. சத்ய பால் மாலிக் பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தவர் என்பதும் ஜம்மு காஷ்மீர், ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com