'மிருகங்களைப் போல நடந்துள்ளார்கள்' கேரள பாதிரியார்கள் மீது நீதிமன்றம் கடும் தாக்கு

'மிருகங்களைப் போல நடந்துள்ளார்கள்' கேரள பாதிரியார்கள் மீது நீதிமன்றம் கடும் தாக்கு

'மிருகங்களைப் போல நடந்துள்ளார்கள்' கேரள பாதிரியார்கள் மீது நீதிமன்றம் கடும் தாக்கு
Published on

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் உள்ள சர்ச்சில் அம்மாநிலத்தை சேர்ந்த நால்வரும் டெல்லியை சேர்ந்த ஒருவரும் பாதிரியாராக உள்ளனர். இந்நிலையில் சர்ச் நிர்வாகத்திற்கு திருவலாவைச் சேர்ந்த ஒருவர் எழுதிய கடிதம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. அதில் பாவமன்னிப்பு கேட்க வந்த தனது மனைவியை 5 பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இவ்விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும் சர்ச் நிர்வாகி ஒருவரும் பேசிய ஆடியோ பதிவுகள் வெளியாகியது. அதில், திருமணத்திற்கு முன்பு தனது மனைவி பாதிரியார் ஒருவரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மகளின் ஞானஸ்தானத்தின் போது, இதுகுறித்து மற்றொரு பாதிரியாரிடம் பாவமன்னிப்பு கேட்டுள்ளார். பாவமன்னிப்புகளை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டிய பாதிரியாரோ எனது மனைவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் இதனை மற்ற மூன்று பாதிரியாரிடமும் தெரிவித்துள்ளார். அவர்களும் பாலியல் வன்கொடுமை செய்ததாக பேசியிருந்தார்.

இந்த விவகாரம் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இவ்விவகாரத்தில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  இது குறித்த ஆடியோ பதிவுகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில் அதை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து இவ்விவகாரத்தில் தீர்வு காண உட்படுத்த தேசிய மகளிர் ஆணையம் முடிவு செய்தது. இதனையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அம்மாநில காவல்துறை தலைவர் லோக்நாத் பெஹரா உத்தரவிட்டார். 

மிகவும் பரபரப்பான சூழலில் ஒரு பெண்ணை கற்பழித்த 4 பாதிரியார்கள் மீது கேரள குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் தங்களை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்ட பாதிரியார்களில் சோனி வர்கீஸ், மேத்யூஸ், ஜெய்ஷ் கே ஜார்ஜ் ஆகிய மூவரும் கேரள உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். 

அதில் அரசியல் நெருக்கடி காரணமாக தங்கள் மீது இந்த பாலியல் புகார் அளிக்கப்பட்டு உள்ளது என்று அவர்கள் கூறி இருந்தனர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி ராஜா விஜயராகவன், “இந்த புகார் மிகவும் தீவிரமானது. இதுபோன்ற நிலையில் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கினால் அது விசாரணையை கடுமையாக பாதிக்கும். ஏனென்றால் விசாரணை தற்போது தொடக்க நிலையில்தான் உள்ளது. எனவே முன் ஜாமீன் வழங்க இயலாது. மேலும் ஒரு பெண்ணிடம் மிருகத்தனமாக நடந்துள்ளனர்” என்று குறிப்பிட்டு கடுமையாக சாடியுள்ளார்.கேரளாவில் கடந்த 18 மாதங்களில் மட்டும் 12 பாதிரியார்கள் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு கைதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com