'அருணாச்சல் எல்லையில் 3 புதிய கிராமங்கள்...'- தென் சீனக் கடல் பாணியில் சீனா ஆக்கிரமிப்பு!

'அருணாச்சல் எல்லையில் 3 புதிய கிராமங்கள்...'- தென் சீனக் கடல் பாணியில் சீனா ஆக்கிரமிப்பு!
'அருணாச்சல் எல்லையில் 3 புதிய கிராமங்கள்...'- தென் சீனக் கடல் பாணியில் சீனா ஆக்கிரமிப்பு!

அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 புதிய கிராமங்களை சீனா உருவாக்கி இருப்பதற்கான செயற்கைக்கோள் புகைப்பட ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

சமீப ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் உரசல் போக்கு வலுத்து வருகிறது. லடாக் எல்லைப் பிரச்னை, கல்வான் பள்ளத்தாக்கு மோதல் என இருநாடுகளுக்கும் இடையே பிரச்னை அதிகரித்து வருகிறது. பிரச்னைக்கு காரணம், இந்திய எல்லைகளை சீனா ஆக்கிரமிப்பு செய்வதே. இதை பல முறை தட்டிக்கேட்டும் சீனா திருந்தியபாடில்லை. இதோ இப்போது அருணாச்சலப் பிரதேச எல்லையில் 3 புதிய கிராமங்களை சீனா உருவாக்கி இருக்கிறது. இதற்கான சான்றுகள் வெளியாகி உள்ளன.

அருணாச்சலப் பிரதேச மாநில எல்லையில் உள்ள இடம் பம்லா. இந்தியா - சீனா - பூடான் ஆகிய நாடுகளின் எல்லைகள் சந்திக்கும் இடம்தான் இது. இந்த இடத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில்தான் தற்போது சீனா 3 கிராமங்களை புதிதாக உருவாக்கி இருக்கிறது. அருணாச்சல் பகுதிகளை தங்கள் பகுதிகள் என உரிமை கொண்டாடி வரும் சீனா, அதனைக் கைப்பற்ற இதுபோன்று புதிய கிராமங்களை உருவாக்கி, அதன் மூலம் எல்லையை ஆக்கிரமிப்பு செய்யத் திட்டமிட்டுளளதாக தெரிகிறது.

Following reports shared earlier by Chinese Media & @VishnuNDTV's story on #Bhutan, images from Bumla Pass #ArunchalPradesh #India now present evidence of new villages/accommodation built by #China this year, possibly for relocation of citizens to strengthen weak border areas https://t.co/HYPedVEWpL pic.twitter.com/aPjYrm8oPD
— d-atis☠️ (@detresfa_) December 6, 2020

சீனாவின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் டாக்டர் பிரம்மா செலானி என்பவர், சீன அரசின் இந்த திட்டம் தொடர்பாக ஆங்கில ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்துள்ளார். அதில், "அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனா, அந்தப் பகுதியை கைப்பற்ற போடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகதான் இந்த கிராமங்களை உருவாக்கியுள்ளது. இந்த கிராமங்களில் அருணாச்சலின் எல்லைப் பகுதிகளில் ஹான் இன சீனர்கள் மற்றும் திபெத் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களையும் குடியேற்ற அந்நாடு திட்டமிட்டு வருகிறது.

தென் சீன கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்த நினைத்த சீனா, அதற்காக சீன மீனவர்களை அந்தப் பகுதியில் அதிகமாக பயன்படுத்தியது. இமயமலை பகுதிகளை ஆக்கிரமிக்க கால்நடை மேய்ப்பவர்களை ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது.  இந்த பாணியைதான் தற்போது அருணாச்சல் பகுதிகளிலும் கையாள இருக்கிறது. 3 கிராமங்களை சீனா உருவாக்கியுள்ளது செயற்கைக்கோள் புகைப்படங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த இடம் 2017ல் டோக்லாம் எல்லைப் பகுதியில் இந்திய வீரர்களுடன் சீன வீரர்கள் தள்ளுமுள்ளுவில் ஏற்பட்ட இடத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது" எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com