சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்!
சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா  மக்களவையில் நிறைவேற்றம்!

சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது தண்டனையை வலுப்படுத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்தது. இதனையடுத்து இந்தச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

 இதுதொடர்பாக “இந்த மசோதா மாநிலங்களின் பட்டியலில் உள்ள அதிகாரத்தை அபரிகரிக்கிறது. மேலும் இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் சில அப்பாவிகளும் தண்டிக்கப்பட வாய்ப்பு உள்ளது. அத்துடன் அரசுக்கு எதிராக சிறிய குரல் எழுப்பினாலும் இந்தச் சட்டத்தின் மூலம் அவர் தண்டிக்கப்படும் நிலை உள்ளது” என எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்தனர். 

இதற்கு பதிலளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா,“பயங்கரவாததிற்கு எதிராக ஒரு பலமான சட்டம் தேவைப்படுகிறது. ஆகவே தான் இந்தச் சட்டத் திருத்த மசோதா கொண்டுவரப்பட்டது. பயங்கரவாத செயல்களுக்கு நிதி உதவி செய்பவர்களும் பயங்கரவாதிகளாகவே பார்க்கப்பட வேண்டும். இந்த மசோதா ஒரு போதும் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது என்பதற்கு நான் உறுதியளிக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

இதனையடுத்து மக்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பிற்கு பின் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் தண்டைனை வழங்க வழி வகுக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com