“நான் ஏன் பதவி விலக வேண்டும்?” - கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

“நான் ஏன் பதவி விலக வேண்டும்?” - கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி
“நான் ஏன் பதவி விலக வேண்டும்?” - கர்நாடக முதல்வர் குமாரசாமி கேள்வி

“நான் ஏன் முதலமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும். அதற்கான என்ன தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது” என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகாவில் அரசியல் குழப்பம் நீடித்து வருகிறது. காங்கிரஸ் மற்றும் மதச் சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த 16 எம்எல்ஏக்கள் தங்களது பதவியை இதுவரை ராஜினாமா செய்துள்ளனர். ஆனால் எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவை சபாநாயகர் இன்னும் ஏற்கவில்லை. இதனிடையே அதிருப்பதி எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து தங்களது பதவி விலகும் முடிவை தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், அந்தச் சந்திப்பின் போது எம்எல்ஏக்கள் பதவி விலகல் குறித்து சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

இதனிடைய முதலமைச்சர் பதவியிலிருந்து குமாரசாமி விலக வேண்டும் என பாஜகவின் எடியூரப்பா தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் எடியூரப்பாவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக குமாரசாமி பேசியுள்ளார். இதுதொடர்பாக பேசிய குமாரசாமி “ நான் ஏன் பதவி விலக வேண்டும். அதற்கான என்ன தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன் 2009-10 ஆம் ஆண்டு நிலைமையை சுட்டிக் காட்டி பேசிய குமாரசாமி, அப்போதைய முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு எதிராக சில அமைச்சர்கள் உள்பட 18 எம்எல்ஏக்கள் இருந்தனர். ஆனால் எடியூரப்பா பதவி விலகவில்லையே.. இப்போது நான் மட்டும் ஏன் பதவி விலக வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மொத்தம் 224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற கட்சிகளின் பலம் 116 ஆக இருந்தது. தற்போது 16 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமா ஏற்கப்படும்பட்சத்தில் தற்போதைய ஆட்சி பெரும்பான்மையை இழக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com