இந்தியா
அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்!
அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி: மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்!
”அனைத்து இந்தியர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்” என்று மத்திய அரசை ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து ட்விட்டரில் கோவிட் வேக்சின் என்ற ஹேஷ்டேக்கில் ராகுல் இவ்வாறு பதிவிட்டுள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 2 ஆவது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதே நேரம் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அனைத்து இந்தியர்களுக்கும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற ரீதியில் ராகுல் காந்தியின் பதிவு அமைந்துள்ளது. முன்னதாக மத்திய சுகாதாரத்துறை கொரோனா தடுப்பூசி தேவைப்படுபவர்களுக்கு அது செலுத்தப்படும் என்றும் அதை விரும்பாதவர்களுக்கு வலுக்கட்டாயமாக வழங்கப்படாது என்றும் தெரிவித்திருந்தது.