”இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்று ” - ராகுல் காந்தி
இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்த ஒன்று என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொருளாதார நிபுணர்களோடு கலந்துரையாடி வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் தலைமை இயக்குனர் ராஜீவ் பஜாஜூடன் ஆன்லைனில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவர் பேசும்போது “ உலகப்போரின் போது கூட இந்தளவு முடக்க நிலை இல்லை. அப்போது கூட சில விஷயங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது என பேசினார்.
மேலும் பேசிய அவர் “இந்தப் பொதுமுடக்கம் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை வெகுவாக பாதித்து விட்டது. அவர்களால் எங்கும் செல்ல முடியவில்லை”எனக் கூறினார்.
அப்போது ராஜீவ் ஒருவேளை நீங்கள் இந்த சமயத்தில் என்ன செய்தீருப்பீர்கள் எனக் கேட்டபோது பதிலளித்த ராகுல் “ மத்திய அரசு ஒரு செயல்பாட்டாளராக செயல்பட்டிருக்க வேண்டும். கொரோனாவுக்கு எதிரான போரை மாநில முதலமைச்சர்களுக்கு நகர்த்தியிருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு பின்வாங்கி விட்டது. தற்போது நேரமும் கடந்து விட்டது. உண்மையில் இந்தியாவில் ஊரடங்கு தோல்வியடைந்து விட்டது. இந்தியாவில் மட்டும்தான் தொற்று அதிகரிக்கும்போதே தளர்வுகளும் அதிகரிக்கின்றன” என்றார்.