வெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்!

வெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்!
வெட்டு குத்தில் முடிந்த ’நில்லு நில்லு சேலஞ்ச்’: பெண்கள் உட்பட 8 பேர் காயம்!

’நில்லு நில்லு சேலஞ்ச்’ தொடர்பாக நடந்த மோதலில் பெண்கள் உட்பட 8 பேர் காயமடைந்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய கிகி சேலஞ்ச் பிரபலமானது. ஓடும் காரில் இருந்து கீழே இறங்கி நடனமாடிய படியே முன்னேற வேண்டும். இதனை ஆடிய பலரும் அதனை வீடியோவாக தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். இந்த நடனத் தால் விபத்து ஏற்படும் என்பதால் யாரும் இதில் ஈடுபட வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதனையும் மீறி கிகி சேலஞ் ச் மேற்கொண்டவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுத்தனர்.

இந்நிலையில் கேரளாவில் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ பிரபலமாகி வருகிறது. இந்த சேலஞ்சை யாரும் மேற்கொள்ள வேண்டாம் என கேரள போலீசார் தற்போது அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2004-ஆம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’ என்ற மலையாள படம் வெளியானது. இப்படத்தில் ‘நில்லு நில்லு’ என்ற பாடல் இடம்பெற்றிருந்தது. பாடலை ஜெசிகிஃப்ட் பாடியிருந்தார். படம் வெளியாகி கிட்டத்தட்ட 14 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தற்போது இப்பாடல் பிரபலமாகி வருகிறது. இப்பாடலுக்கு தான் கேரள மக்கள் ‘நில்லு நில்லு சேலஞ்ச்’ மேற்கொண்டு வருகின்றனர். இளம் வயது ஆண்களும் பெண்களும் இந்த சேலஞ்சில் ஈடுபட்டு வருகிறனர்.

சாலையில் வரும் பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை வழி மறித்து நான்கைந்து பேர் கொண்ட கும்பல், ‘நில்லு நில்லு’ பாடலுக்கு நடமானடுகின்றனர். அப்போது கையில் இலைகளை வைத்துள்ளனர். இல்லையென்றால் ஹெல்மெட்டை அணிந்தபடி நடனமாடு கின்றனர். இதனை வீடியோகவாக எடுத்து டிக்டாக் ஆப்பில் பதிவிடுகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது. 

இந்நிலையில் இதுபோன்ற சேலஞ்சில் ஈடுபட வேண்டாம் என கேரள போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ’திடீரென்று வண்டியின் பிரேக் பிடிக்கா விட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். காமெடிக்காக செய்வது உயிரை பறித்துவிடும் என்பதை உணர வேண்டும்” என கூறியுள்ளனர். 

இந்நிலையில் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள திருர் என்ற இடத்தில் சில மாணவர்கள் இந்த சேலஞ்ச் விளையாட்டை மேற்கொண்டனர். இதனால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து உள்ளூர்க்காரர்கள் சேர்ந்து மாணவர்களுடன் தகராறில் ஈடுபட் டனர். இதனால் தப்பிய ஓடிய மாணவர்கள் பின்னர் ஆட்களை அழைத்துவந்து அங்கிருந்த கடைகளில் கல்வீசித் தாக்கினர். அங்கு நின்றிருந்தவர்களையும் தாக்கத் தொடங்கினர். இதில் ஒரு பெண் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர். 

இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்ததும் மாணவர்கள் தப்பியோடி விட்டனர். வழக்குப் பதிவு செய்த போலீசார் இதுபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com