காஷ்மீர் மசோதா.. காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தில் ஜனார்த்தன் திவேதி..!

காஷ்மீர் மசோதா.. காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தில் ஜனார்த்தன் திவேதி..!
காஷ்மீர் மசோதா.. காங்கிரஸ் நிலைப்பாட்டிற்கு எதிரான கருத்தில் ஜனார்த்தன் திவேதி..!

காஷ்மீரில் மறுசீரமைப்பு மசோதா தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஜனார்தன் திவேதி கருத்து தெரிவித்துள்ளார். 

ஜம்மு-காஷ்மீர் மாநில மறுசீரமைப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேபோல், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு பத்து சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவும் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான மசோதா மீது விவாதம் நாளை நடைபெறும். மாநிலங்களவையில் இந்த மசோதாவிற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் ஜனார்த்தன் திவேதி அக்கட்சியின் நிலைப்பாட்டிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டது சிறப்பான ஒன்று. என்னுடைய குரு ராம் மனோகர் லோஹியா இந்தப் பிரிவுக்கு எதிராக தான் இருந்தார். இந்தப் பிரிவு தற்போது நீக்கப்பட்டதன் மூலம் வரலாற்று பிழை மிகவும் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சரி செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக மாநிலங்களவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் கட்சியின் குலாம் நபி ஆசாத், “இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைந்தே இருக்க வேண்டும் என்பதற்காக 1947ஆம் ஆண்டிலிருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள், உயிர்த்தியாகம் செய்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீர், லடாக் என எந்தப் பகுதி மக்கள் கஷ்டப்பட்டாலும் பிற பகுதி மக்கள் அவர்களுக்கு துணை இருந்திருக்கிறார்கள். ஆனால் இதில் தற்போது பிரிவு ஏற்பட்டுவிட்டது. சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்துள்ள பாரதிய ஜனதா அரசு ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது” எனக் கூறினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com