“பொது முடக்கம் ஒன்றும் ‘ஆன்’, ‘ஆஃப்’ சுவிட்ச் இல்லை” - ராகுல் காந்தி விமர்சனம்

“பொது முடக்கம் ஒன்றும் ‘ஆன்’, ‘ஆஃப்’ சுவிட்ச் இல்லை” - ராகுல் காந்தி விமர்சனம்

“பொது முடக்கம் ஒன்றும் ‘ஆன்’, ‘ஆஃப்’ சுவிட்ச் இல்லை” - ராகுல் காந்தி விமர்சனம்
Published on

பொது முடக்கம் என்பதை மத்திய அரசு ‘ஆன்’, ‘ஆஃப்’ சுவிட்ச் போல நினைக்காமல், தங்கள் திட்டத்தை வெளிப்படையாகக் கூற வேண்டும் எனக் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, “அரசு தனது நடவடிக்கைகளில் கொஞ்சமாவது வெளிப்படைத் தன்மை கொண்டிருக்க வேண்டும். மக்கள் அனைவரும் எந்தெந்த துறைகள், எந்தெந்த சேவைகள் இயங்கும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

பொது முடக்கம் என்பது ஒரு சாவி அல்ல. அதை நினைத்தால் திறப்பதற்கும் அல்லது மூடுவதற்கும். அதில் பல்வேறு விஷயங்கள் அடங்கியுள்ளது. அது மக்களுக்கு மனரீதியான மாற்றத்தையும் ஏற்படுத்தும். எனவே பொது முடக்கம் ‘ஆன்’, ‘ஆஃப்’ சுவிட்ச் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

கொரோனா தொற்றால் சில விதமான மக்களுக்குத்தான் அபாயம் உள்ளது. அது வயதானவர்கள், சர்க்கரை நோய் பிரச்னை கொண்டவர்கள் மற்றும் உயர் ரத்த அழுத்த நோயாளிகள் உள்ளிட்டவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. மற்றவர்களுக்கு இந்தத் தொற்றால் பெரும் பாதிப்பு இல்லை. எனவே மக்களது மனநிலையை நாம் மாற்றமடையச் செய்ய வேண்டும். ஒருவேளை அரசு பொது முடக்கத்தைத் திறக்க முடிவு செய்தால், மக்களின் அச்சத்தை முதலில் போக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com