போலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா?

போலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா?
போலி கணக்கு, புத்தாண்டு அறை... மிரட்டப்படுகிறாரா ஐ.ஜி, ரூபா?

நேர்மையான அதிகாரிகளுக்கு நடக்கிற எல்லாமே, கர்நாடக ஐ.பி.எஸ். அதிகாரி ரூபாவுக்கும் நடக்கிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விஐபி வசதிகள் வழங்கப்பட்டதென்றும் இதற்காக சிறை துறை அதிகாரி களுக்கும், டிஜிபி சத்தியநாராயண ராவுக்கும் ரூ.2 கோடி லஞ்சம் வழங்கப்பட்டதாக பரபரப்பு புகார் கூறியவர்தான், இந்த ஐ.ஜி, ரூபா! பிறகு, விசா ரணை, அது இது என்று ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார். 

கடந்த செப்டம்பர் மாதம், லஞ்சம் வாங்காத அதிகாரிகளுக்காக கோவையில் நடந்த பாராட்டு விழாவில் பேசிய ஐ.ஜி, ரூபா, ‘’நேர்மையான அதிகாரிகளை அரசுகள் விரும்புவதில்லை. அவர்கள் வளைந்து கொடுக்காததால் பந்தாடப்படுகின்றனர். இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் நேர்மையான அதிகாரிகள் செயல்படுத்தும் பணிகள் தொடர்ச்சி இல்லாமல் அறுபட்டுவிடும் நிலை ஏற்படுகிறது’’ என்று கூறியிருந் தார். அவர் சொன்னது போலவே பந்தாடப்பட்டு இப்போது, ஊர்க்காவல் படை ஐ.ஜி.யாக இருக்கிறார். 

இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு கடந்த சில நாட்களுக்கு முன், ஒரு பெண் பேசியிருக் கிறார். ’’நான் கர்நாடகா ஐ.ஜி, ரூபா. எனக்கு டிசம்பர் 29 ஆம் தேதியில் இருந்து ஜனவரி 3 ஆம் தேதி வரை புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக, சொகுசு அறை வேண்டும். குடும்பத்துடன் வர இருக்கிறேன்’’ என்று கூறி முன்பதிவு செய்திருந்தார். மங்களூரில் உள்ள சிராங் குடியிருப்பில் இருந்து அறை பதிவு செய்த பெண் பேசியிருக்கிறார். செல்போன் எண்ணையும் கொடுத்திருக்கிறார். 

ஆனால், ஐ.ஜியாச்சே, விடுவார்களா? அங்கிருந்த சிறந்த அறை ஒன்றை அவருக்காக ஒதுக்கி இருந்தார்கள். ஆனால், சொன்னபடி அந்த தேதி களில் ஐ.ஜி, ரூபா வரவில்லை. புத்தாண்டுக்கு வருவதாக சொன்ன, ஐ.ஜி. புத்தாண்டு முடிந்தும் வரவில்லையே என நினைத்து அங்குள்ள போலீஸ் அதிகாரிகளிடம் ஓட்டல் நிர்வாகம் விசாரித்திருக்கிறது. அவர்கள், ஐ.ஜி ரூபாவுக்கு போன் செய்து, ’ஓட்டல் அறை புக் செய்திருந்தது பற்றி கேட்க, அவருக்கு அதிர்ச்சி. பிறகு ‘’நான் ஏன் அறை புக் பண்ணணும்? அது பொய், என் பெயரைப் பயன்படுத்தி யாரோ இதை செஞ்சிருக்காங்க’’ என்று சொன்னார் அவர்களிடம்.

 இதுபற்றி தெற்கு பெங்களூரில் உள்ள பனக்சங்கரி போலீஸ் ஸ்டேஷனில் இதுபற்றி  புகார் கொடுத்தார். இதற்கு பிறகுதான் விஷயம் வெளியே தெரிந்திருக்கிறது. போலீசார் அந்தப் பெண் கொடுத்த போன் நம்பரை தொடர்பு கொண்டால், ஸ்விட்ச்டு ஆஃப்! 

‘’ போன வாரம், என் பெயர்ல போலியா இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கி, ஏழை பெண் குழந்தைகளுக்கு உதவுங்கன்னு நான் டொனேஷன் கேட்கிற மாதிரி கேப்ஷன் எழுதி, பணம் வசூல் பண்ணியிருக்காங்க. இப்ப அறை புக் பண்ணியிருக்காங்க. போலீஸ் உடனடியாக செயல்பட்டு, இதுக்குப் பின்னால இருக்கிறவங்களை கண்டுபிடிக்கணும்’’ என்கிறார்  ஐ.ஜி.ரூபா.

’’ஊழல் புகார் கூறியதில் இருந்து அவரை டார்க்கெட் செய்து சிலர் செயல்பட்டு வருகிறார்கள். ரூபாவை மிரட்ட அவர்கள் செய்யும் வேலைதான் இது’’ என்கிறார்கள் சிலர். எது எப்படியோ, இந்த சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com