இந்தியாவில் இந்துக்கள் எங்கும் சிறுபான்மையினர் இல்லை: காஷ்மீர் பாஜக தலைவர்
இந்தியாவின் எந்தப் பகுதியிலும் இந்துக்கள் சிறுபான்மையினர் இல்லை என காஷ்மீர் பாஜக தலைவர் அசோக் கவுல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அளவில் பெரும்பான்மையினராக உள்ள இந்துக்கள் எப்படி ஒரு பகுதியில் மட்டும் சிறுபான்மையினராக இருக்க முடியும் என்று கூறியுள்ளார். இந்துக்கள் யாரும் தங்களை சிறுபான்மையினராக நினைப்பதில்லை என்றும், ஜம்மு-காஷ்மீரில் உள்ள இந்துக்கள் தங்களை பெரும்பான்மையினராகவே கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு கிராமத்தில் இந்துக்களில் ஆண்கள் குறைவாக இருந்தால், மற்றொரு கிராமத்தில் பெண்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இதற்கு சிறுபான்மையினர் என்று பொருள் அல்ல. இந்திய அளவில் பெரும்பான்மையினராக உள்ளவர்களை எவ்வாறு சிறுபான்மையினர் என்று கூற இயலும்? என்றும் தெரிவித்துள்ளார்.
கவுல், ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் மட்டுமின்றி, காஷ்மீர் பண்டிட் சமூகத்தினரின் தலைவரும் ஆவார். ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தில் இந்துக்களை சிறுபான்மையினராக அறிவிக்க வேண்டும் என அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த வாரம் ஆதாரங்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில் கவுல் இந்த அறிக்கை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.