தூங்கிக்கொண்டிருப்பதைப் போன்றே கிடந்த உடல்கள்:  நிலச்சரிவு குறித்து விவரிக்கும் மக்கள்

தூங்கிக்கொண்டிருப்பதைப் போன்றே கிடந்த உடல்கள்: நிலச்சரிவு குறித்து விவரிக்கும் மக்கள்

தூங்கிக்கொண்டிருப்பதைப் போன்றே கிடந்த உடல்கள்: நிலச்சரிவு குறித்து விவரிக்கும் மக்கள்
Published on

கடந்த வாரம் மூணார் அருகே இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் தூங்கிய நிலையிலேயே இறந்ததால் அவர்களின் உடல் மீட்கப்பட்டபோதும் தூங்கிக்கொண்டே இருப்பதைப்போன்று இருந்தது. இந்த பெரும் நிலச்சரிவில் இதுவரை 43 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பல உடல்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கேரளா மாநிலம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த வருடம் கடந்த வெள்ளிக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த பேரழிவில் இறந்தவர்கள் பலர் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள். பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்.  பலருடைய குழந்தைகள் வெளியூர்களில் படிப்பவர்கள். ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டில் இருந்தனர். பலருடைய உறவினர்களும் வந்திருந்தனர். முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ஆனந்த் என்பவரின் வீட்டில் மட்டும் குழந்தையின் பிறந்தநாள் கொண்டாட வந்திருந்த 21 பேர் இருந்தனர். இந்த குடும்பத்தில்தான் முதலில் உடல்கள் மீட்கப்பட்டன.

ஆனால் விபத்து நடந்த நேரத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை. இதுதவிர, வணிகம் செய்பவர்கள், உள்ளூர்வாசிகள் என நிறையப்பேர் அங்கிருந்ததாக தெரிகிறது.

தொடர்மழை காரணமாக நிலச்சரிவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பே மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மீட்புப் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான வசதி இல்லாத அளவுக்கு சாலைகள் மற்றும் பாலம் இடிந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com