“சித்தார்த் நடந்துக்கொண்ட விதத்தில் ஆச்சர்யமடைந்தேன்” - உருகும் கணினி ஆசிரியர்
“சித்தார்த்தாக நடந்துகொண்ட விதத்தில் ஆச்சர்யமடைந்தேன்” - உருகும் கணினி ஆசிரியர்
‘கபே காபி டே’ நிறுவனத்தின் உரிமையாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா கடந்த 27ஆம் தேதி நேத்ராவதி ஆற்றில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலை ஏழு மணியளவில் மங்களூருவில் உள்ள உல்லால் பாலம் அருகே கைப்பற்றப்பட்ட சித்தார்த்தாவின் உடல் சிக்மங்களூருவில் உள்ள அவரது காபி எஸ்டேட்டில் தகனம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1997ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரஞ்சு கணினி பயிற்சி மையத்துக்கு கணினிக் கற்றுகொள்வதற்க்காக சித்தார்த்தா சென்றுள்ளார். அந்தப் பயிற்சி வகுப்பில், அதிக வயது உடைய மாணவராக அவர் இருந்துள்ளார். 20 வயது மாணவர்களுக்கு மத்தியில் முப்பது வயதுடைய ஒரு மாணவராக சித்தார்த்தா பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
அந்த காலகட்டத்தில் சித்தார்த்தாவிற்கு பயிற்சி எடுத்த கணினி ஆசியரியர் பிரகாஷ் ஷெட்டி தற்போது சில நினைவுகளை பகிர்ந்துள்ளார். அவர் கூறும் போது, “வகுப்பில் சித்தார்த்தாதான் அதிக வயதுடையவர். ஆனால் அவரோ ஒரு சாதரண மாணவர் போலதான் நடந்துகொண்டார். கணிணி பிரபலமான அந்தக் காலத்தில் கணிணிப் பயிற்சி அவரது தொழிலுக்கு அவசியம் என உணர்ந்த சித்தார்த்தா, பயிற்சியில் டிப்ளோவை தேர்ந்தெடுத்தாகவும், அதற்காக தனது வீட்டில் இரண்டு கணினிகளை வாங்கியதாகவும் கூறினார்.
சித்தார்த்தா தனது கடினமான பணிகளுக்கும் இடையேயும் தவறாமல் பயிற்சியில் கலந்து கொண்டார். சித்தார்த்தா தன்னிடம் கேட்டுக்கொண்டதன் பேரில் தான் வாரநாட்களில் அவரது எஸ்டேட்டுக்கு சென்று பயிற்சி அளித்தேன். ஒரு வருடகாலம் நீடித்த இந்தப் பயிற்சியில் அவர் தொழிலாளர்களுடன் நடந்து கொண்ட விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் சிறந்த நகைச்சுவை உணர்வு உடையவர்” என்று தெரிவித்தார்.