ரூ50 ஆயிரம் சம்பளம் வாங்கும் அரசு ஊழியருக்கு இவ்வளவு சொத்துக்களா! ம.பியை அதிர வைத்த ரெய்டு
மத்திய பிரதேசத்தில் மாதம் ரூ50 சம்பளம் ஆயிரம் வாங்கும் அரசு ஊழியரால் எப்படி ரூ.85 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்க முடிந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் மருத்துவக் கல்வித்துறையில் கிளர்க் ஆகப் பணியாற்றி வருபவர் கேஷ்வானி. இவர் தனது வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்து வைத்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அவரது இல்லத்தில் சோதனை செய்தபோது ரூ.85 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தவிர கேஷ்வானி வீட்டிலிருந்து பல கோடி மதிப்பிலான அசையா சொத்துகள் வாங்கப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அசையா சொத்துகள் அனைத்தையும் தனது மனைவி பெயரில் கேஷ்வானி வாங்கியிருந்தார். கேஷ்வானியின் குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் அதிக அளவில் பணம் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
ரெய்டுக்காக போலீசார் கேஷ்வானி வீட்டுக்குச் சென்றபோது வீட்டில் இருந்த விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
மாதம் ரூ50 சம்பளம் ஆயிரம் வாங்கும் கேஷ்வானியால் எப்படி ரூ.85 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்க முடிந்தது என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தாலிபான் கொடி பொறிக்கப்பட்ட பேனர்கள்.. சென்னை செஸ் ஒலிம்பியாட் தொடரில் சலசலப்பு