நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் போது மண் சரிவு - 10 பேர் பலி

நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் போது மண் சரிவு - 10 பேர் பலி

நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் போது மண் சரிவு - 10 பேர் பலி
Published on

மத்திய அரசின் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது ஏற்பட்ட மண்சரிவால் தெலுங்கானாவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலம் திலெரு என்ற கிராமத்தில் இன்று கிராம மக்கள் பலர் மத்திய அரசின் நூறு நாள் வேலைத்திட்டம் எனப்படும் ‘மகாத்மா தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு’ திட்டத்தின் பணிபுரிந்து கொண்டிருந்தனர். ஆழமாக பள்ளமெடுக்கும் வேலையில் அவர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென ஏற்பட்ட மண் சரிவில் அவர்கள் சிக்கினர். சிலர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து ஓடினர்.

இருப்பினும் மண் சரிவின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாததால் அதில் சிக்கிய 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்து உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மண் சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். 

மேலும் 10 பேரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். அதிகாரிகள் தரப்பில் கூறும்போது உரிய பாதுகாப்பு உபகரணங்கள் கொண்டு செல்லாததால் உயிரிழப்பு நேரந்துள்ளதாகவும், மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர். 

(Courtesy : The News Minute)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com