தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெகன் மோகன் -ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெகன் மோகன் -ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்
தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய ஜெகன் மோகன் -ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்

ஆந்திரா மாநிலத்தில் இன்று புதிதாக 13 மாவட்டங்கள் உதயமாகி உள்ளன.

ஆந்திராவில் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது ஜெகன் மோகன் ரெட்டி ஒவ்வொரு மக்களவைத் தொகுதியும் ஒரு மாவட்டமாக மாற்றப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். வாக்குறுதியின் படி, ஆந்திர மாநிலத்தில் இருக்கும் 13 மாவட்டங்களை பிரித்து புதிதாக 13  மாவட்டங்களை முதல்வர் ஜெகன் மோகன் உருவாக்கினார். இதனால், இந்த மாநிலத்தின் மொத்த மாவட்டங்கள் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. இதற்கான அரசாணை நேற்று முன்தினம் வெளியானது.

இந்த நிலையில், குண்டூர் மாவட்டம் தாடே பள்ளியில் காணொளி மூலம் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களையும் தொடங்கி வைத்தார். புதிய மாவட்டங்களின் இணையதளங்கள் மற்றும் கையேடுகளை வெளியிட்டார். சித்தூர் மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு சித்தூரை தலைமையிடமாகக் கொண்டு சித்தூர் மாவட்டமும், திருப்பதியை தலைமையிடமாகக் கொண்டு பாலாஜி மாவட்டமும் இன்று முதல் செயல்பட உள்ளது.

இதனிடையே  புதிதாக உருவான மாவட்டங்களுக்கும் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இவர்கள் இன்று முதல் தங்களது பணிகளை தொடங்க உள்ளனர்.

இதையும் படிக்க: இந்துக்கள் ஆயுதமேந்த வேண்டும் என பேச்சு - மதத் தலைவர் மீது வழக்கு

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com