எல்லையில் துப்பாக்கி சூடு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

எல்லையில் துப்பாக்கி சூடு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு

எல்லையில் துப்பாக்கி சூடு: 2 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
Published on

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள அவ்நீரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது தீவிரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 3 வீரர்கள் காயமடைந்தனர். மேலும், ஒரு தீவிரவாதியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து அங்கு இந்திய வீரர்கள் தீவிர தேடுதல் ஈடுபட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com