இளம் எலிகளின் இரத்த நாளங்களோடு இணைப்பதால் வயதான எலிகளின் ஆயுள் நீளுமா? அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு!

இதன் படி, வயதான எலிகள் 6 முதல் 9 சதவீதம் வரை தனது வாழ்நாள் காலத்தை நீட்டிக்கமுடியும் என்பதை புதிய ஆய்வானது நிரூபித்துள்ளது. இது இளம் எலிகளின் இரத்ததில் நீண்ட ஆயுளை ஊக்குவிக்கும் கலவை உள்ளதை சுட்டி காட்டுகிறது என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கின்றன.
young blood extend lifespans of older mice
young blood extend lifespans of older miceTwitter

இளம் எலிகளின் இரத்த நாளங்களை அறுவை சிகிச்சை மூலம் வயதான எலிகளோடு இணைக்கும் இந்த செயல் முறைக்கு ”ஹீட்டோரோக்ரோனிக் பரபயாசிஸ்” என்று பெயர். இந்த செயல்முறையானது வயதான எலியின் உயிரியல் வயதைத் திரும்பப் பெறுகிறது. வயதான எலிகளில் இளம் இரத்தத்தின் மறுசீரமைப்பு விளைவுகளை பகுப்பாய்வு செய்வதில் இந்த ஆராய்ச்சி பயனுள்ளதாக இருக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Parabiosis  Experiment
Parabiosis Experiment Twitter

புதிய ஆய்வறிக்கை ஒன்றில், ஆராய்ச்சியாளர்கள் அறுவை சிகிச்சை மூலம் மூன்று மாத வயதுடைய இளம் எலிகளையும் 20 மாத வயதுடைய எலிகளையும் இணைத்தனர். மூன்று மாதங்கள் இவற்றை இணைத்து, பிறகு இந்த எலிகள் பிரிக்கப்பட்டால் எவ்வளவு காலம் வாழ்கிறது என்பதைக் கண்காணித்தனர். இளம் வயதுடன் இணைக்கப்பட்ட 20 மாத வயதுடைய எலிகள் 10 சதவிகிதம் நீண்ட காலம் வாழ்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

டியூக் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசினின் செல் உயிரியலாளரும் இந்த புதிய ஆய்வின் ஆசிரியருமான ஜேம்ஸ் வைட் இது குறித்து கூறுகையில், ”இந்த ஆய்வானது மனிதர்களில் சோதிக்கப்படவில்லை. இருப்பினும் இது ஒரு பயனுள்ள ”காக்டெயில்” ஆக நிச்சயம் இருக்கும் என்று நினைக்கிறேன்”என்று தெரிவித்துள்ளார்.

பரபயாசிஸ் எனப்படும் இந்த ஆய்வானது பல காலங்களில் பல்வேறு நபர்களால் முன்னமே சோதனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Different Time Period
Different Time PeriodTwitter
  • 19 ஆம் நூற்றாண்டில், பிரெஞ்சு விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். அச்சோதனையில் இரண்டு எலிகளின் இரத்த நாளங்களையும் இணைத்து, அவைகள் சுற்றோட்ட அமைப்பைப் பகிர்ந்து கொள்கின்றன என்பதை நிரூபிப்பதற்காக கொடிய நைட்ஷேட் தாவரத்தின் கலவையான பெல்லடோனாவை இரண்டு எலிகளில் ஒரு எலிக்கு செலுத்தி அதன் மூலம் நிருபித்தனர்.

  • 1950 களில், கார்னெல் பல்கலைக்கழகத்தின் கிளைவ் மெக்கே மற்றும் அவரது சகாக்கள் முதுமையை ஆராய்வதற்கு பரபயோசிஸைப் பயன்படுத்தினர். அவை இளம் மற்றும் வயதான எலிகளுடன் சேர்ந்து, அவற்றின் தோலில் உள்ள நுண்குழாய்கள் ஒன்றிணைக்கும் வகையில் அவற்றின் பக்கவாட்டுகளை ஒன்றாக இணைத்தன. பின்னர், டாக்டர் மெக்கே மற்றும் அவரது சகாக்கள் பழைய எலிகளில் உள்ள குருத்தெலும்புகளை பரிசோதித்து, அது இளமையாக இருப்பதை முடிவு செய்தனர்.

  • 2000 களின் முற்பகுதியில், பராபயோசிஸ் ஒரு மறுமலர்ச்சியை அடைந்தது என்று கூறலாம் . 21 ஆம் நூற்றாண்டின் நுட்பங்களைப் பயன்படுத்தி வெவ்வேறு வயதுடைய விலங்குகள் ஒரே இரத்த ஓட்டத்தைப் பகிர்ந்து கொள்ளும்போது என்ன நடந்தது என்பதை ஆய்வு செய்தனர். இதன் மூலமாக வயதான எலிகளின் தசைகள் மற்றும் மூளைகள் புத்துயிர் பெற்றிருப்பதைதையும், அதே நேரத்தில் இளைய எலிகள் வயதான அறிகுறிகளைக் கொண்டவையாக மாறுகின்றனர் என்பதையும் ஆய்வின் மூலம் கண்டறிந்தனர். இப்படி பல்வேறு காலகட்டங்களில் ”பரபயோசிஸ்” முறையை அடிப்படையாக வைத்து சோதனையானது மேற்கொள்ளப்பட்டது.

  • 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சோதனையில் ஒரு இளைஞரிடமிருந்து ரத்த பிளாஸ்மாவானது எடுக்கப்பட்டு வயதான ஒரு நபருக்கு செலுத்தி அவரது நோய்களை குணமாக்கும் முயற்சியில் மருத்துவர்கள் ஈடுபட்டனர். இதனை "உணவு மற்றும் மருந்து நிர்வாகம்" இத்தகைய சிகிச்சைகளுக்கு எதிராக ஒரு எச்சரிக்கையை வெளியிட்டது. இது தீங்கு விளைவிக்ககூடிய ஒன்று. இந்த முயற்சியில் ஈடுபடுவது தவறு என்று எச்சரிக்கை வெளியிட்டது.

மேலும் இந்த ஆய்வை பொறுத்தவரை "ஹெட்டோரோக்ரோனிக் பரபயோசிஸ் எனப்படும் இந்த செயல்முறை ”வயதாகும் வேகத்தை குறைக்கும்” என்பதற்கான முதல் ஆதாரம் இதுவாகும். இது ஆயுட்காலம் மற்றும் ஆரோக்கியத்தின் நீட்டிப்புடன் இணைந்துள்ளது" என்று ஒரு அறிக்கையில் ஜேம்ஸ் வைட் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது anti- aging விளைவுகளை தெரிந்து கொள்வதற்காக டாக்டர் வொயிட் மற்றும் அவருடைய சாகாக்களுடன் இணைந்து, ஒரு வயதான மற்றும் இளமையான எலியை 3 மாதங்களுக்கு ஒன்றாக இணைத்து வழக்கமான பரபயோசிஸ் சோதனையை விட 2 மடங்கு சோதனையை அவற்றில் செலுத்துத்தியுள்ளனர். பிறகு இவற்றின் வாழ்நாள் காலத்தை கணக்கிடும் போது வயதான எலிகள் நீண்ட காலம் வாழ்வது மட்டும் அல்லாமல் அவற்றின் வாயதான தன்மையும் மாற்றி அமைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும், அவற்றின் இரத்தம், கல்லீரல் போன்றவற்றில் உள்ள மூலக்கூறு குறிப்பான்கள் (molecular markers) விலங்குகளின் ”உயிரியல் வயதுக்கான கடிகாரத்தை” (animals biological age) போல செயல்படுகின்றன. இந்த கடிகாரங்கள் இந்த எலிகளில் இடைநிறுத்தப்பட்டதே இந்த மாற்றத்திற்கு காரணம் . அதே சமயம் இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த மூலக்கூறு குறிப்பான்கள் வயதான எலிகளை இளமையானவையாக காட்டுகின்றனர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

young blood extend lifespans of older mice
young blood extend lifespans of older miceTwitter

இந்த ஆய்வானது ’நேச்சர் ஏஜிங்’ இதழில் வியாழக்கிழமை(27.07.2023)அன்று வெளியிடப்பட்டது.

இதே போன்ற பரிசோதனையானது கடந்த ஆண்டு உக்ரேனிய விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், ”வயதான எலிகள் நீண்ட காலம் வாழ்ந்ததாக காட்டப்படவில்லை. இந்த சோதனைகளானது குறைந்தபட்ச நபர்களால் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், இது மிகவும் துணிச்சலான ஒரு சோதனை. இதை செய்வது என்பது எளிதானது இல்லை” என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி மைக்கேல் கான்பாய் தெரிவித்துள்ளார்.

மேலும், அறுவை சிகிச்சை நிபுணர்கள் இரண்டு எலிகளைப் பிரித்தவுடனே வயதான எலிகள் இளம் செல்களை இழந்து விடுகின்றன. இருப்பினும் அவை அவற்றின் பழைய நிலைக்குத் திரும்பவில்லை என்பது இதன் மூலமாக அறியப்பட்டது.

ஏனென்றால், வயதான எலிகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் கலவைகள் இளம் எலிகளின் இரத்தத்தால் நீர்த்துபோகிறது என்றும் வயதான எலிகளில் உள்ள உயிரணுக்களை மறுபிரசுரம்(reprograme) செய்யும் மூலக்கூறுகள், இளம் எலிகளின் இரத்தத்தில் இருக்கலாம், அதனால் எலிகள் பிரிக்கப்பட்ட பிறகும் அவை இளைய வயதுடைய எலிகளைப் போலவே நடந்து கொள்கின்றன” என்பதும் இந்த ஆய்வின் மூலமாக அறிந்து கொள்ளப்படுகின்றது.

டாக்டர் கிளாடிஷேவ் இந்த ஆய்வினை குறித்து கூறுகையில் ’என்னைப் பொறுத்தவரை, இந்த சோதனையானது மனிதர்களில் செயல்படுத்துவது என்பதை நான் நியாயமாக பார்க்கவில்லை. இது வேலை செய்யும் என்று நினைப்பது மிகவும் விசித்திரமானது" என்று கூறினார்.

குறிப்பு: ஆராய்ச்சிகள், புதிய கண்டு பிடிப்புகள் என்பது இயற்கையான ஒரு போக்கை ஆபத்தை விளைவிக்கும் வகையில் மாற்றாத வண்ணம் அமைந்தால் சரியான ஒன்றாக அமையும். எனவே ஒன்றை பொதுமை படுத்தும் போது அதில் உள்ள இரு விளைவையும் யோசித்து செயல்படுவது என்பது சிறந்தது.

-Jenetta Roseline S

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com