World Blood Donor Day| ரத்த தானம் செய்வதில் இவ்வளவு ஆச்சர்யமான விஷயங்கள் இருக்கிறதா? A - Z தகவல்கள்!

உலக அளவில் கொண்டாடப்படும் ரத்த தான தினம்! ரத்த தானம் ஏன் சிறந்தது? இது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு.
ரத்த தானம்
ரத்த தானம்முகநூல்

ரத்த வெள்ளையணுக்கள், ரத்த சிவப்பணுக்கள் என்று இரண்டு வகையாக ரத்த அணுக்கள் நமது உடலில் உள்ளன. வெள்ளை அணுக்கள் நோய் எதிர்ப்பாற்றலையும், சிவப்பு அணுக்கள் உடலுக்கு தேவையான ஆற்றலையும் தருகின்றன.

ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை கொடுக்கும் ஹீமோகுளோபின் எனப்படும் சத்துப்பொருள் உடலில் அனைத்து பகுதிகளுக்கு ரத்தத்தின் மூலம் ஆக்ஸிஜனை எடுத்து செல்ல உதவுகிறது. ஆக, உடலின் ஆரோக்கிய செயல்பாடுகளில் ரத்தமின்றி இயங்காது உடல் என்றுதான் கூறவேண்டும்.

இந்தவகையில், ரத்தத்தின் முக்கியத்துவம் பற்றி அறியவும், ரத்த தானத்தின் முக்கியத்துவம் பற்றி அறியவும், ஒவ்வொரு ஆண்டும் உலக நாடுகள் உலக ரத்த தான தினத்தை ஜூன் 14 ஆம் தேதி (WBDD) கொண்டாடுகின்றன.

இந்த தினத்தின் முக்கிய நோக்கம் பாதுகாப்பான ரத்தம் மற்றும் ரத்தப் பொருட்களின் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தன்னார்வத்தோடு ரத்த தானம் செய்து மற்றவர்களின் உயிரை காக்கும் உயிரிகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படுகிறது.

சமீபத்தில் கூட சுமார் 400 கிமீ பயணம் செய்து, அரியவகை ரத்த வகையை ‘பாம்பே ப்ளட் க்ரூப்’ ரத்தத்தை தானம் செய்து பெண்ணின் உயிரை காப்பாற்றினார் ஒருவர். ஆக,சாதாரண மனிதனை கூட உயிர் காக்கும் கடவுளாக மாற்றும் அளவிற்கு சிறந்த தானமாக ரத்ததானமாகவே பார்க்கப்படுகிறது.

ரத்த தானம்
மக்களே உஷார்! சர்க்கரை வியாதி குறித்து, வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட் ! மருத்துவர் சொல்வது என்ன?

இரும்புச் சத்து குறைதல், விபத்துகளால் ஏற்படும் ரத்த இழப்பு, சத்தான உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடலில் ரத்த இழப்பு ஏற்படுவதற்கான காரணங்கள்.

இதுபோன்ற இக்காட்டான சூழல் ஒருவரின் உயிர்க்காக்கும் தானமாக கருதப்படும் ரத்த தானத்தை 3 மாதங்களுக்கு ஒருமுறை செய்வது நலம் என்று கூறுகிறார்கள் மருத்துவ நிபுணர்கள் கூறுகிறாகள்.

ஏன் முக்கியம்?

ஒரு யூனிட் ரத்த தானம் செய்வது 3 பேருக்கு பயன்படுத்தப்படுகிறதாம்.

ரத்ததானம் செய்யும்போது உடலில் இருக்கும் தேவைக்கு அதிகபடியான இரும்பு சத்து, ரத்தத்தோடு சேர்ந்து சென்று விடுவதால் இதயம், நுரையீரல், போன்ற இடங்களில் படிந்து சோர்வை ஏற்படுத்துவதை தடை செய்கிறது.

குறிப்பாக ரத்தத்திலிருந்து பிளாஸ்மா, ஹீமோகுளோபின் என பிரிந்து, தேவைப்படுபவர்களுக்கு ஏற்றார் போல, தந்து உதவ முடியும். இதனால், தேவைப்படுபவர்களுக்கு உதவும் மனநிறைவை நாம் அடைய இயலும்.

ஒரு யூனிட் ரத்தம் நம் உடலில் உள்ள 650 அளவு கலோரியை எரித்து விடுகிறதாம். மேலும், தொடர்ச்சியாக ரத்த தானம் செய்வது மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கும்.

ரத்த தானத்தின் மூலம் உடலில் புதிய ரத்த செல்கள் உருவாவதை வேகப்படுத்தும்.

யாரெல்லாம் ரத்ததானம் செய்யலாம்?

தேசிய ரத்தமாற்று கவுன்சில் இணையதளத்தின் படி,

18 முதல் 65 வயதுடையவராக இருக்க வேண்டும். ஆண்கள் மூன்று மாதத்திற்கு ஒரு முறையும், பெண்கள் நான்கு மாதத்திற்கு ஒரு முறையும் ரத்த தானம் செய்யலாம்.

ஆனால் இது சில நாடுகளில் 16, 17 வயதுடையவர்கள் ரத்த தானம் செய்கின்றனர்.

ரத்த தானம் செய்ய உடல் எடை 45 கிலோவிற்கு குறைவாக இருக்க கூடாது. மேலும் ஹீமோகுளோபின் அளவு 12.5 கிராமிற்கு குறைவாக இருக்க கூடாது.

யார் செய்யக்கூடாது?

பாதுகாப்பற்ற உடலுறவு கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய கூடாது. எச்.ஐ.வி தொற்று இருப்பார்கள் ரத்த தானம் செய்ய கூடாது.

மூன்று மாதத்திற்கு முன் மலோரியாவிற்கு சிகிச்சை அளித்து கொண்டவர்கள்.

காலரா, டைபாய்டு, ப்ளேக் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் 15 நாட்களுக்கு ரத்த தானம் செய்யக்கூடாது. ரேபிஸ் நோய்கு தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் ஓராண்டுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.

உடலில் பச்சை குத்தியவர்கள் அடுத்த 6 மாதங்களுக்கு ரத்த தானம் செய்யக் கூடாது.

முக்கியமாக

வேவ்வேறு பரிசோதனைகளின் மூலம் ரத்தம் பாதுகாப்பானது என்று உறுதி செய்த பின்னரே ரத்த தானம் செய்ய வேண்டும். ஒரு முறைமட்டுமே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் மூலமே ரத்தம் கொடுக்க வேண்டும். இவை ரத்தம் செலுத்துபவர்களுக்கும் தொற்று ஏற்படுத்தாமல் தடுக்கும்.

எனவே, உயிர் கொடுக்கும் உன்னத பணியை செய்யும் ஒவ்வொரு நெஞ்சங்களுக்காகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com