திருமணத்திற்கு பிறகு பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?விளக்குகிறார் மகளிருகான மருத்துவர்!
தாம்பத்தியம் என்பது தம்பதிகளுக்கிடையே நடக்கும் ஒரு அழகான விஷயம். அது மனதிற்கு மகிழ்ச்சியையும் உடலுக்கு புத்துணர்வையும் கொடுத்தாலும் அதில் சில சுகாதார விஷயங்களை கடைப்பிடிப்பது நல்லது. ஆம் ஆரோக்கியமான உடலுறவை பேண பெண்கள் தம்பத்தியத்திற்கு முன்பும் பின்பும் கட்டாயம் இந்த விஷயங்களை கடைபிடிக்க வேண்டும்.. அது என்னென்ன விஷயங்கள்? என்று மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவர் மீனா மகாலிங்கம் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிகள் என்னென்ன? என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
இன்றைய பெண்கள் தாம்பத்தியத்திற்கு பிறகு சரியாக சுத்தம் செய்வதில்லை அல்லது அதிகமாக சுத்தம் பார்த்து வாஷ் செய்துக் கொண்டே இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு அந்தரங்க பகுதியில் தொற்று ஏற்பட்டு அவதி அடைந்துவிடுகின்றனர். இதற்கு என்ன தீர்வு? என்று மருத்துவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், கண்டிப்பாக சுத்தமாக இருக்க வேண்டும். ஆனால் இப்போது உள்ள பெண்கள் ஓவர் சுத்தம் என்ற பெயரில் சில க்ரீம்களை கொண்டு வாஷ் பண்ணிட்டே இருக்காங்க. அது தவறு. அதுமட்டுமல்லாமல் சரியான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர். குழந்தை வேண்டாம் என்று தாம்பத்தியமே வைத்துக் கொள்ளாமலும் இருக்கின்றனர். ஆனால் அது எல்லாமே தவறு . மேலும் தாம்பத்தியத்திற்கு பிறகு அந்தரங்க பகுதியை ஒருமுறை சுத்தம் செய்தாலே போதுமானது என்றார் மருத்துவர் மீனா.
தாம்பத்தியத்திற்கு பிறகு சுத்தம் செய்தால் குழந்தைக்கு பிளான் செய்பவர்கள் குழந்தை பிறக்காது என்ற கருத்து வெகுவான பெண்களிடம் உள்ளது. அது சரியானதா? சுத்தம் செய்யக்கூடாதா? என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர், ஆம் உடனே வாஷ் பண்ணாமல் இருப்பது நல்லது.. 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்வது நல்லது.. சிலருக்கு விந்து அணுக்கள் மேலே பட்டவுடனேயே கரு உருவாகிவிரும்.. ஆனால் சிலருக்கு உள்ளே போய் அந்த அணுக்கள் நன்றாக செட்டில் ஆக வேண்டியிருக்கும். அப்போதுதான் கரு தரிக்கும். அதனால் தம்பத்தியம் செய்த பிறகு 20 நிமிடங்கள் கழித்து வாஷ் செய்வதுதான் நல்லது” என்கிறார் மருத்துவர்.
தாம்பத்தின் போது சாப்பிடலாமா? இல்லை சாப்பிடக்கூடாதா என்ற கேள்விக்கு பதிலளித்தவர், கண்டிப்பாக உடலுறவுக்கு முன்னும் பின்பும் உணவு சாப்பிடலாம். ஆனால் அளவுக்கு அதைகமாக சாப்பிட்டுவிட்டு பண்ணக்கூடாது. அது அசவுகரியமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் மகிழ்வுடன் உறவு கொள்ள முடியாது.. அதனால் அளவாக அறை வயிறாக சாப்பிட்டுவிட்டு தாம்பத்தில் ஈடுபடுவது நல்லது.
பொதுவாக பெண்கள் இரவு நேரங்களில் உள்ளாடைகளை அணிந்துக் கொண்டு தூங்குகிறார்கள்? அது சரியானதா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர், சிலருக்கு உள் ஆடைகளை அணிந்தால் தான் துக்கம் வரும். அதனால் அவர்கள் கண்டிப்பாக அணிந்துக் கொள்ளாம். சிலருக்கு அதனை தூங்கும் போது அகற்றிவிட்டு தூங்கதான் பிடிக்கும். அதனால் ஒன்றும் இல்லை அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அணிந்துக் கொள்ளலாம்.
பெண்கள் தொற்றுகள் வராமல் யோனியை எப்படி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், பெண்களுக்கு அடிக்கடி அந்தரங்க பகுதியில் எரிச்சல், அரிப்பு, பூஞ்சைம் என பலவிதமான தொற்றுகள் வரக்கூடும் . அப்படி வராமல் இருக்க அந்தரங்க பகுதியை சுத்தம் செய்யும் போது முன்பு இருந்து பின்பாக சுத்தம் செய்தல் தொற்றுகள் வராமல் தடுக்கலாம். அத்துடன் மாதவிடாய் காலங்களில் முடியை முழுமையாக எடுக்காமல் ட்ரிம் செய்தல் வேண்டும்.
தாம்பத்தியத்தின் போது ஆண் பெண் இருவருமே என்னென்ன விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர், சில டிப்ஸ்ச்-ஐ கூறியுள்ளார்.
1. கைகளை கழுவுதல்
உடலுறவுக்கு பின்னர் முதலில் கட்டாயமாக செய்ய வேண்டிய விஷயம் என்னவென்றால், கைகளை கழுவுதல்தான்.. ஆம் நம் கைகளை சோப்பு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்வது நல்லது . உடலுறவுக்கு பின் எந்த பொருட்களையும் தொடக்கூடாது. கைகளை கழுவிய பிறகே தொட வேண்டும்.. ஏனென்றால், உடலுறவிற்கு பின்னர் ஏற்படும் கிருமி தொற்றுகளை தவிர்க்க கைகளை சுத்தமாக கழுவுதல் அவசியம் என மருத்துவர் மீனா கூறுகிறார்.
2. சிறுநீர் கழித்தல்
ஒவ்வொரு முறையும் உடலுறவு செய்த பிறகு, முதலில் சிறுநீர் கழிக்க வேண்டும்.. அதனால் பிறப்புறுப்பில் ஊடுருவும் கிருமிகளை வெளியே அகற்ற முடியும். அத்துடன் அந்தரங்க பகுதியை நன்றாக வாஷ் செய்துவிட்டு அல்லது குளித்துவிட்டு தாம்பத்தியத்தில் ஈடுபடுவது நல்லது என்கிறார் மருத்துவர்.
3. பருத்தி ஆடைகள் அணிதல்
உடலுறவுக்கு பின்னர் நன்றாக கற்றோட்டமாக இருக்கும் செளகரியமான ஆடைகளை அணிவது நல்லது.. அதனால் உங்களின் சருமம் நன்றாக சுவாசிக்கும்.. நீங்களும் சோர்வு அடையமாட்டீர்கள். அதனால் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.
4. பாதுகாப்பு அம்சங்களை அகற்றுதல்
உடலுறவின் போது நீங்கள் பயன்படுத்திய பாதுகாப்பு அம்சங்களை அகற்ற வேண்டும். பின்னர் அவற்றை உடனேயே மற்றொரு பையில் போட்டு வெளியே வராத அளவிற்கு நன்றாக அந்த பையை சுற்றி குப்பை தொட்டியில் போட வேண்டும். அதனால் கிருமிகள் பரவாமல் இருக்கும்..
5. தண்ணீர் அருந்துதல் அவசியம்
உடலுறவுக்கு பின் ஏற்படும் உடல் சோர்வை தடுக்க ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது அவசியம். இது உங்கள் உடலில் ஏற்பட்ட நீரிழப்பை சரி செய்யவதுடன் உடல் சோர்வடையாமலும் பார்த்துக் கொள்ளும் என்று மருத்துவர் மீனா மகாலிங்கம் கூறுகின்றார்.
6. முடியை அகற்றுதல் கூடாது
பெண்கள் தங்களது அந்தரங்க பகுதியில் உள்ள முடிகளை முழுவதுமாக ஷேவ் செய்து அகற்றக்கூடாது.. அதுவும் சில தொற்றுகளுக்கு ஆளாக்கும். அது உங்கள் ஆண் துணைக்கும் பிரச்சனையை கொடுக்க வாய்ப்பு உள்ளது. அதனால் அண்டஹ்ரங்க முடியை ட்ரிம் செய்வதே நல்லது என்கிறார் மருத்துவர்.