திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இதுதான் காரணமா? - உளவியல் மருத்துவரின் முக்கிய அறிவுரை!

திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இதுதான் காரணமா? - உளவியல் மருத்துவரின் முக்கிய அறிவுரை!
திருமணத்தை மீறிய உறவு ஏற்பட இதுதான் காரணமா? - உளவியல் மருத்துவரின் முக்கிய அறிவுரை!

முக்கியத்துவம் வாய்ந்த உறவை பிரிவது என்பது எத்தனை சோகமான, இதயத்தை நொறுக்குவதாக இருக்கும்? அதுவும் தம்பதியாக, காதலர்களாக இருப்பவர்களிடையே உண்டாகும் மனப்பிளவு வார்த்தைகளில் அடக்கிட முடியாது. தன்னுடைய இணை வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார் என தெரியவரும் போது அவர்களின் மனதில் ஏற்படும் கசப்பான எண்ணங்களை அத்தனை சீக்கிரத்தில் போக்கிட முடியாது.

ஆனால், உருகி உருகி காதலித்தவர்கள் ஏன் தன்னுடைய இணையரை தவிர்த்து வேறொருவருடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்ற கேள்வி எழலாம். இந்த கேள்விக்கு உளவியலாளரும், உறவுச் சிக்கலை தீர்ப்பவருமான மருத்துவர் தீபாளி பத்ரா பதிலளித்திருக்கிறார்.

அதில், “உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் காதலர்கள்/தம்பதிகள் இடையே இடைவெளி ஏற்படும் போது தங்களது இணையர் மீதான ஆர்வத்தை இழக்கிறார்கள். இதனால் வேறொருவருடன் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். தன் மீதான வாழ்க்கைத் துணையின் கவனம் சிதறும் போதும், குறையும் போது மூன்றாவது நபரிடம் பேசத் தூண்டும்.” என்கிறார்.

மேலும், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக உடல் உறவு கொண்டிருக்காமல் இருப்பதே, திருமணம் அல்லது உறவு முறிவுக்குப் பின்னால் இருக்கும் பெரிய காரணியாக கருதப்படுகிறது. உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு இல்லாமல் போனால், அந்த வாழ்க்கைத்துணை புதிதாக ஒன்றைத் தேடுவதோடு, வேறொருவரின் உணர்ச்சிப் பூர்வமான ஆதரவைக் கண்டறியவும் வழிவகுக்கும்.

எப்போதும் வீட்டையும் குழந்தைகளையும் நிர்வகிப்பதில் ஈடுபட்டிருந்தால், ஒரு தனிமைப்படுத்தப்பட்ட மனைவி, திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடுவதில் விருப்பம் காட்டலாம். நீண்ட காலமாக உறவில் இருந்து, ஒருவருக்கொருவர் வசதியாக இருந்த பிறகு, நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் நேரங்கள் இருக்கலாம். அப்போது, சின்னச் சின்ன வாக்குவாதங்கள் முதல் மன அழுத்தம் வரை அனைத்தும் சேர்ந்து திருமண உறவை தோல்வியடையச் செய்யலாம் என மருத்துவர் பத்ரா குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 

தொடர்ந்து பேசியவர், திருமணத்தை மீறிய உறவு அதிகரிப்பதற்கு சமூக வலைதளங்களும் காரணமாக இருக்கின்றன. தனிநபர் ப்ரைவசி சோசியல் மீடியா மூலம் கிடைப்பதால் எந்த ஒரு குற்றவுணர்வும் இல்லாமல் தங்களது இணையை ஏமாற்றும் நிலையும் தொடர்கின்றன.

எதுவாகினும், உங்களது வாழ்க்கை துணையுடன் ஒன்றாக அமர்ந்து மனம் விட்டு பேசி, எப்போதும் சண்டையிடுவதை தவிர்த்து, ஒன்றாக பேசி பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என கூறியிருக்கிறார்.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com