\
Why Does the Body Cause Vomiting? Experts Explain
வாந்திX

உடலின் தற்காப்பு நடவடிக்கையா வாந்தி? மருத்துவர்கள் கூறுவது என்ன?

நச்சுப்பொருட்கள், தொற்றுகள் உள்ளிட்டவை உடலில் கலக்கும் முன்பே வெளியேற்றுவதற்காக கூட, ஒருவருக்கு வாந்தி ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
Published on

வாந்தி என்பது சில சமயங்களில், உடலின் தற்காப்பு செயல்முறையாக கூட இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். நச்சுப்பொருட்கள், தொற்றுகள் உள்ளிட்டவை உடலில் கலக்கும் முன்பே வெளியேற்றுவதற்காக கூட, ஒருவருக்கு வாந்தி ஏற்படக்கூடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

Why Does the Body Cause Vomiting? Experts Explain
உடல்நலக்குறைவுPt web

ஆனால், இது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே என குறிப்பிடும் மருத்துவர்கள், தொடர் வாந்தி இருந்தாலோ, வாந்தியுடன் கடும் வயிற்று வலி, அதிக காய்ச்சல், மலத்தில் ரத்தம், நீரிழப்பு, மனதில் குழப்பம் உள்ளிட்டவை ஏற்பட்டாலோ, உடனே மருத்துவரை அணுக வேண்டுமென அறிவுறுத்துகின்றனர். கெட்டுப்போன உணவை உட்கொண்டால் வரும் வாந்தி என்பது, சில மணி நேரங்களில் தானாக சரியாகிவிடும் எனவும் கூறுகின்றனர்.

Why Does the Body Cause Vomiting? Experts Explain
அனலாக் பனீர் எனும்ஆபத்து.. எச்சரிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை!!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com