எந்தவயது குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல்போன் பார்க்கலாம்; பாதிப்பு எப்போது? - மருத்துவர்களின் ஆலோசனை

குழந்தைகள் தற்போது செல்போன் பார்ப்பது அதிகரித்து வரும் சூழலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்த வயது குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல் போன் பார்க்கலாம் போன்ற விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.
செல்போன் பற்றிய தகவல்கள்
செல்போன் பற்றிய தகவல்கள்PT

குழந்தைகள் தற்போது செல்போன் பார்ப்பது அதிகரித்து வரும் சூழலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன. எந்த வயது குழந்தைகள் எவ்வளவு நேரம் மொபைல் போன் பார்க்கலாம் போன்ற விவரங்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

மாறிவரும் நவீன உலகில் குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் போட்டோ எடுப்பது, அதனுடைய குறும்புத்தனமான வீடியோக்களை ரீல்ஸ் எடுப்பது என மொபைல் போன்களோடு குழந்தைகளுக்கு அப்போதே தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. முன்பெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது நிலாவை காட்டுவது, காக்கா கதை சொல்வது என அப்போதைய பெற்றோர் பல்வேறு வழிமுறைகளை வைத்திருந்தார்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கு சோறு ஊட்டுவதற்கும், அவர்களை சமாதானப்படுத்துவதற்கும் எங்களுக்கு ஒரு கருவியாக மொபைல் போன்கள் மாறிவிட்டதாக தெரிவிக்கிறார்கள் பல தாய்மார்கள்.

மொபைல் போன்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக வெர்ட்சுவல் ஆட்டிசம் உள்ளிட்ட பல பாதிப்புகளுடன் குழந்தைகள் மருத்துவமனைக்கு வருவதாக கூறுகிறார் குழந்தை நல மருத்துவர் செந்தில்குமார்.

Dr. செந்தில் குமார்
Dr. செந்தில் குமார்PT

”மன இறுக்கத்திற்கு காரணம் மூளை வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும் போது வரக்கூடிய குறைபாடு செல்போன்களோடு உள்ள பிணைப்பை துண்டிக்க முடியாமல் பெற்றோர் தவிக்கும் நிலையில் எந்தெந்த வயதில் எவ்வளவு நேரம் செல்போன்களை பார்க்கலாம்” என்று விளக்குகிறார் மனநல மருத்துவர் நிவேதா.

DR.நிவேதா
DR.நிவேதாNGMPC22 - 147

மேலும் அவர் பேசும்பொழுது, ”autism spectrum disorder மூளை வளர்ச்சிகள் பாதிப்பு ஏற்படும் போது வரக்கூடிய ஒரு குறைபாடு. இதில் இரண்டு சிம்டம்ஸ் நாம் பார்க்கமுடியும்

சோசியல் இன்டக்சன் அண்ட் கம்யூனிகேஷன்

குழந்தைகள் அடுத்தவர்களிடம் தொடர்பு கொள்ளும் போது சில பாதிப்புகள் வரும். திரும்பத் திரும்ப ஒரே செய்கைகளை செய்வது இது போன்ற அறிகுறிகள் இருக்கும். இத்தகைய குறைபாடு இரண்டு அல்லது மூன்று வயது குழந்தைகளுக்கு வரும்.

குழந்தைகள் ஊஞ்சல் ஆடுவது, குழுவாக இணைந்து விளையாடுவதை காண்பதே அரிதாகி வரும் சூழலில் செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களிடம் இருந்து வரும் தலைமுறையினரை காக்க வேண்டியது இந்நாளில் அவசியமாகிறது.” என்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com